சிட்னியின் வடக்கு கடற்கரைகளில் முடக்க நிலை

சிட்னியின் வடக்கு கடற்கரைகளில் முடக்க நிலை

1 mins read
0cf982ee-cece-4d71-a527-3f7784e72d41
-

ஆஸ்திரேலிய அதிகாரிகள் சிட்னி நகரிலுள்ள வடக்கு கடற்கரைகளின் முடக்க நிலையை டிசம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. கொவிட்-19 கிருமிப்பரவல் அங்கு மோசமாகி வர அந்த இடத்தைத் தவிர்க்கும்படி அதிகாரிகள் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஒரே இரவில் அங்கு புதிதாக ஒன்பது கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனுடன் அந்தப் பகுதியிலுள்ள கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 116க்கு அதிகரித்துள்ளது. கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்காக பொருள் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் அந்த இடத்தைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் சமூகப் பரவலை இதுவரை நல்ல முறையில் கட்டுப்படுத்தி வந்த ஆஸ்திரேலியாவுக்கு புதிய பரவல் இடியாக விழுந்துள்ளது. புதிய பரவலின் விளைவாக கிட்டத்தட்ட 250,000 பேர் தங்கள் வீட்டிலேயே தங்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளனர்.