மலேசியாவின் அன்றாட கொவிட்-19 கிருமித்தொற்று எண்ணிக்கை இன்று 2,335 ஆகப் பதிவாகி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதில் 728 சம்பவங்கள் கோலாலம்பூரைச் சேர்ந்தவை. 710 சம்பவங்கள் சிலாங்கூரையும் 412 ஜோகூரையும் சேர்ந்தவை. சிங்கப்பூருக்கு ஆக அருகில் உள்ள மலேசிய மாநிலம் ஜோகூர்.
புதிய சம்பவங்களில் 11 பேர் வெளிநாட்டில் இந்நோயைத் தொற்றினர். இதர கிருமித்தொற்றுகள் சமூகத்தில் ஏற்பட்டவை என்று மலேசியாவின் சுகாதார தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லாஹ் தெரிவித்தார். பாதிக்கப்பட்டோரில் பலர் சிறைகளையும் குடிநுழைவு பணிமனைகளையும் சேர்ந்தவர்கள் என அவர் குறிப்பிட்டார்.
மலேசியாவின் மொத்த கிருமித்தொற்று எண்ணிக்கை 103,900 ஆக உள்ளது. அந்நாட்டில் கிருமித்தொற்றால் மாண்டோரின் எண்ணிக்கை 451ஆக உள்ளது.

