தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய வகையான கொரோனா கிருமி - பிரான்சில் முதலாவது மரணம் பதிவு

1 mins read
7990b2b0-abff-4094-a5f2-4f5f95f8da0a
-

புதிய வகையான கொரோனா கிருமி ஒன்றால் விளைந்துள்ள முதலாவது மரணத்தை பிரான்ஸ் பதிவு செய்திருக்கிறது. அந்நாட்டில் கொவிட்-19 கிருமியால் கிருமித்தொற்றுச் சம்பவங்களும் மரணங்களும் அதிகரித்து வருகையில் புதிதாக ஒரு கிருமித்தொற்று அலை குறித்த அச்சங்களை இந்தச் சம்பவம் கிளப்பியுள்ளது.

லண்டனிலிருந்து அண்மையில் பிரான்ஸ் திரும்பிய பிரஞ்சுக்காரர் ஒருவருக்கு இந்தக் கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக பிரஞ்சு சுகாதார அமைச்சு தெரிவித்தது. டிசம்பர் 19ஆம் தேதியன்று தாயகம் திரும்பிய அந்த ஆடவர், தனிமைப்படுத்தப்பட்டதாகவும் தற்போது அவரது உடல்நலம் சரியாக இருப்பதாகவும் அமைச்சு கூறியது.

இந்தப் புதியவகை கொரோனா கிருமியால் தென்கிழக்கு இங்கிலாந்தில் 1,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதாக பிரிட்டனின் சுகாதார அமைச்சர் மேட் ஹென்காக் தெரிவித்தார்.பிரிட்டனிலும் தென்னாப்பிரிக்காவிலும் இந்தப் புதியவகை கொரோனா கிருமியால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகையில் அவ்விரு நாடுகளிலிருந்து வருவோரைத் தங்களது எல்லைகளில் அனுமதிப்பதை பல நாடுகள் நிறுத்தியுள்ளன.