ஜோகூர் வட்டாரத்தில் இன்று புதிய கட்டுப்பாடு

ஜோகூர் வட்டாரத்தில் இன்று புதிய கட்டுப்பாடு

1 mins read

கோலா­லம்­பூர்: ஜோகூ­ரில் உள்ள கோத்தா திங்கி வட்­டா­ரம் உள்­ளிட்ட சில பகு­தி­களில் மேம்­ப­டுத்­தப்­பட்ட நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு ஆணை இன்று திங்­கட்­கி­ழமை முதல் நடப்­புக்கு வரு­வ­தாக மலே­சி­யா­வின் மூத்த அமைச்­சர்­களில் ஒரு­வ­ரான இஸ்­மா­யில் சாப்ரி யாக்­கோப் தெரி­வித்துள்­ளார்.

புதிய ஆணைக்கு இணங்க கோத்தா திங்கி தலைமை காவல் நிலை­யத்­தில் தடுப்­புக்­கா­வ­லில் வைக்­கப்­பட்டு உள்­ளோர் இட­மாற்­றம் செய்­யப்­படுவர் என்­றார் அவர்.

அந்­தத் தலை­மை­ய­கத்­தில் விசா­ர­ணைக் கைதி­க­ளாக 'லாக் அப்'பில் அடைக்­கப்­பட்டு உள்ள 171 பேரி­டம் கிருமி பரி­சோ­தனை நடத்­தப்­பட்­ட­தில் 125 பேருக்கு தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.

ஜோகூர் பாரு சீர்­தி­ருத்த மையத்­தி­லும் பத்து 19 ஜாலான் உலு சோ-பொந்தியான் தொழி­லா­ளர் தங்­கு­மி­டத்­தி­லும் மேம்­

ப­டுத்­தப்­பட்ட நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு ஆணை பிறப்­பிக்­கப்­பட்டு உள்­ள­தாக திரு இஸ்­மா­யில் சாப்ரி தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்டு உள்­ளார்.

புதிய கட்டுப்பாட்டு ஆணை ஜன­வரி 10ஆம் தேதி வரை நடப்­பில் இருக்­கும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

மலேசியாவில் நேற்று 1,196 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.