அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் மூவர் மரணம்

அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் மூவர் மரணம்

1 mins read

வாஷிங்­டன்: இலி­ய­னாய் மாநில உருட்­டுப்­பந்து திட­லில் நடந்­த

துப்­பாக்­கிச்­சூட்­டில் மூவர் உயி­ரி­ழந்­த­தா­க­வும் மேலும் மூவர் காய­முற்­ற­தா­க­வும் போலிஸ் தெரி­வித்­தது.

இச்­சம்­ப­வம் தொடர்­பில் போலி சிடம் சிக்­கிய சந்­தேக நபர் போலிஸ் காவ­லில் வைக்­கப்­பட்­டுள்­ளார்.

சம்­ப­வம் நடை­பெற்ற டான் கார்ட்­டர் லேன்ஸ் திடல் அருகே பொது­மக்­கள் நெருங்க வேண்­டாம் என ராக்­ஃபர்ட் நகர போலி­சார் டுவிட்­ட­ரில் கேட்­டுக்­கொண்­ட­னர். சனிக்­கி­ழமை பின்­னி­ர­வில் பதி­வேற்­றப்­பட்ட அத்­த­க­வ­லில் 37 வயது வெள்ளை இன ஆட­வர் போலி­சின் பிடி­யில் உள்­ள­தா­கக் குறிப்­பிட்­டது.

துப்­பாக்­கிச்­சூடு நடை­பெற்­ற­தும் அங்கு விரைந்து வந்த தலைமை போலிஸ் அதி­காரி டான் ஓஷே சம்­பவ இடத்­தைப் பார்­வை­யிட்ட பின்­னர் செய்­தி­யாளர்­க­ளி­டம் பேசி­னார். விசா­ரணை நடை­பெற்று வரு­வ­தால் யார், என்ன கார­ணம் என்ற விவ­ரங்­க­ளுக்குப் பதி­ல­ளிக்க இய­ல­வில்லை என்று அப்­போது அவர் கூறி­னார். இருப்­பி­னும் மூன்று பேர் மாண்­டதை அவர் உறு­திப்­ப­டுத்­தி­னார்.

காய­ம­டைந்த மூவ­ருக்கு உள்­ளூர் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை அளிக்­கப்­ப­டு­கிறது. சுடப்­பட்­ட­வர்­களில் இரு­வர் பதின்ம வய­தி­னர் என்­றார் அந்த அதி­காரி.

ராக்­ஃபர்ட் நகர் சிகா­கோ­வின் வட­மேற்கே சுமார் 130 கிலோ மீட்­டர் தூரத்­தில் உள்­ளது.

தாக்­கு­தல் நடத்­தி­ய­வ­ருக்கு குறிப்­பிட்ட நோக்­கம் இருப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை என்­றும் யாரை­யும் குறி வைத்து அவர் தாக்­கி­ய­தா­க­வும் புலப்­ப­ட­வில்லை என்றும் போலிஸ் தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டது.