பிரான்சில் 3வது முடக்கம் வரும்

பிரான்சில் 3வது முடக்கம் வரும்

1 mins read

பாரிஸ்: கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் தொடர்ந்து அதி­க­ரித்­தால் நாட­ளா­விய மூன்­றா­வது முடக்­கத்தை அமல்­ப­டுத்த வேண்டி வரும் என பிரான்ஸ் சுகா­தார அமைச்­சர் டாக்­டர் ஒலி­வி­யர் வெரன் தெரி­வித்­துள்­ளார். கிறிஸ்­ம­ஸுக்­குப் பிந்­திய தொற்று அதி­க­ரிப்­பைச் சந்­தித்து வரும் பிரான்­சில் நாள் ஒன்­றுக்கு சரா­ச­ரி­யாக 15,000 புதிய தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வாகி வரு­கின்­றன. புதிய வகைக் கிருமி அங்கு முதன்­மு­த­லாக கடந்த வெள்­ளிக்­கி­ழமை உண­ரப்­பட்­டது.

"மக்களைப் பாதுகாப்பதே முக்கியம் என்பதால் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மீண்டும் அமல்

படுத்துவதில் தயக்கம் இல்லை," என்றார் அமைச்சர்.