மேலும் 1,000 ரோஹிங்யாக்களை வெளியேற்றுகிறது பங்ளாதேஷ்

மேலும் 1,000 ரோஹிங்யாக்களை வெளியேற்றுகிறது பங்ளாதேஷ்

1 mins read

டாக்கா: மேலும் ஒரு ரோஹிங்ய அக­தி­கள் குழுவை தொலை­தூர தீவுக்கு இட­மாற்­றம் செய்ய பங்­ளா­தேஷ் முடி­வெ­டுத்­தி­ருப்­ப­தாக அந்­நாட்­டின் அதி­கா­ரி­கள் நேற்று கூறி­னர். அண்­டைய மியன்­மா­ரிலிருந்து அடைக்­க­லம் நாடி வந்­த­வர்­களை வேறி­டத்­துக்கு மாற்­றக்­கூ­டாது என மனித உரி­மைக் குழுக்­கள் விடுத்த வேண்­டு­கோளுக்கு பங்­ளா­தேஷ் அர­சாங்­கம் செவி­ம­டுக்­க­வில்லை.

முஸ்­லிம் சிறு­பான்மை மக்­க­ளான சுமார் ஆயி­ரம் ரோஹிங்ய குடி­மக்­கள் இன்­னும் ஒரு­சில நாட்­களில் வங்­காள விரி­கு­டா­வில் தொலை­தூ­ரத்­தில் அமைந்­துள்ள பாசான் சார் தீவுக்கு அனுப்­பப்­பட உள்­ள­தாக நம்­பப்­ப­டு­கிறது.

இம்­மா­தத் தொடக்­கத்­தில் ஏற்­கெ­னவே 1,600 ரோஹிங்ய அக­தி­களை பங்­ளா­தேஷ் இவ்­வாறு இட­மாற்­றம் செய்­த­தாக அது­பற்றி நேர­டி­யாக அறிந்த இரு அதி­கா­ரி­கள் ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னத்­தி­டம் கூறி­னார்.

முத­லில் சிட்­ட­காங் நக­ருக்கு அவர்­கள் கொண்டு செல்­லப்­ப­டு­வார்­கள். கடல் அலை­க­ளின் வேகத்­தைப் பொறுத்து பாசான் தீவுக்கு அவர்­கள் மாற்­றப்­ப­டு­வார்­கள் என பெயர் குறிப்­பிட விரும்­பாத அதி­காரி ஒரு­வர் கூறி­னார்.

இதற்­கி­டையே, இடம் மாறிச் செல்ல விரும்­பு­வோர் மட்­டுமே தொலை­தூர தீவுக்­குக் கொண்டு செல்­லப்­ப­டு­வார்­கள் என பங்­ளா­தேஷ் அர­சாங்க அக­தி­கள் நிர்­வா­கப் பிரி­வின் துணை அதி­காரி முகம்­மது ஷம்­சத் டௌஸா என்­ப­வர் கூறி­னார்.