தாய்லாந்தில் கடந்த மாதம் 3,065 சுற்றுப்பயணிகள் வருகை புரிந்ததாக அந்நாட்டின் அதிகாரபூர்வ தகவல்கள் குறிப்பிடுகின்றன. வெளிநாட்டினர் உள்ளே வருவதற்கு தாய்லாந்து ஏப்ரல் மாதம் விதித்த தடை அக்டோபர் மாதத்தின்போது அகற்றப்பட்டது.
கடந்தாண்டு நவம்பர் மாதத்தின்போது 3.39 சுற்றுப்பயணிகள் வருகை புரிந்தது குறிப்பிடத்தக்கது.வெளிநாட்டினரை தாய்லாந்து மெல்ல மெல்ல அனுமதித்து வருகிறது. ஆயினும், அதன் முன்னேற்றத்திற்கு, பத்து நாட்களுக்கு முன்பு புதிதாக 1,600 பேரை பாதித்த கிருமிப்பரவல் தடங்கலாக உள்ளது.

