தென்கொரியாவில் அதிக கொவிட்-19 உயிரிழப்புகள்

தென்­கொ­ரி­யா­வில் இது­வரை இல்­லாத அள­வாக திங்கட்கிழமை ஒரே நாளில் 40 பேர் கிரு­மித்­தொற்­றுக்கு பலி­யா­கி­விட்­ட­னர். கொள்­ளை­நோய் பரவ ஆரம்­பித்­தது முதல் இம்­மா­தம் 21ஆம் தேதி­யும் 22ஆம் தேதி­யும் தலா 24 பேர் மாண்­டதே இது­வரை ஆக அதி­க­மான அன்­றாட உயி­ரி­ழப்­பாக இருந்­தது. இதனை புதிய சம்­ப­வம் முறி­ய­டித்­து­விட்­ட­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர்

இந்த 40 பேரை­யும் சேர்த்து இது­வரை அங்கு கிரு­மித்­தொற்­றுக்­குப் பலி­யா­னோர் எண்­ணிக்கை 859 ஆனது. மர­ணம் தவிர, புதி­தாக கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­ன­வர் எண்­ணிக்கை நேற்று 1,046 என பதி­வா­னது. இத­னை­யும் சேர்த்து மொத்­தம் பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை 58,725 ஆக அதி­க­ரித்­தது. இதற்­கி­டையே தலை­ ந­கர் சோலில் உள்ள சிறைச்­சாலை ஒன்று கிரு­மித்­தொற்று குழு­ம­மாக உரு­வெ­டுத்­தி­ருப்­பது குறித்து பிர­த­மர் சுங் சை-கியுன் வருத்­தம் தெரி­வித்து உள்­ளார். அங்கு கைதி­க­ளாக உள்­ளோ­ரில் 757 பேருக்கு கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்டு உள்­ள­தைத் தொடர்ந்து முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் முடுக்­கி­வி­டப்­பட்டு உள்­ளன.

குறிப்­பாக, சோல் நக­ரில் இது­வரை 1,400 பேரி­டம் தொற்று காணப்­பட்டு உள்­ள­தால் அங்கு தற்­கா­லிக கிரு­மிப் பரி­சோதனை முகாம்­கள் அமைக்­கப்­பட்டு வரு­கின்­ற­ன. கடந்த இரு வாரங்­களில் மட்­டும் இந்த முகாம்­களில் 500,000க்கும் மேற்­பட்­ட­வர்­க­ளுக்­குப் பரி­சோ­தனை நடத்­தப்­பட்டு உள்­ளது.

கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த இந்த வாரம் தென்­கொ­ரியா புதிய நட­வ­டிக்­கை­களை அறி­வித்­தது. நான்கு பேருக்கு மேல் ஒன்­று­கூ­டக் கூடாது என்­ப­தும் அந்­தப் புதிய கட்­டுப்­பா­டு­களில் ஒன்று.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!