வகுப்புகளிலும் தேர்வுகளிலும் நேரடியாகப் பங்கேற்க மாணவர்கள் தங்களது கல்லூரிக்குத் திரும்ப வேண்டும் என மலேசிய மெட்ரிகுலேஷன் துறை விடுத்த அறிவிப்புக்கு மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
அந்த உத்தரவை ரத்து செய்து மாற்று வழி காணுமாறு கல்வி அமைச்சைக் கேட்டுக்கொள்ளும் இணையப் படிவத்தில் ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் கையெழுத் திட்டு வருகின்றனர். சுமார் 11,600 பேர் கையெழுத்திட்டுள்ளதாக நேற்றுக் காலையில் வெளியான தகவல் தெரிவித்தது.
மலேசியா முழுவதும் கொவிட்-19 பரவல் சம்பவங்கள் கடந்த இரு மாதங்களாக நான்கு இலக்கத்தில் பதிவாகி வருவதால் மாணவர்கள் ஒன்றுகூடும் போது அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்
கூடும் என்ற அச்சம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நிலவுகிறது. கடந்த சனிக்கிழமை ஆக அதிகமாக 2,335 தொற்று சம் பவங்கள் மலேசியாவில் பதிவாயின.
கையெழுத்துக்கு விடப்பட்ட மனுவில், கல்வி அமைச்சின் மெட்ரிகுலேஷன் துறை வெளியிட்ட உத்தரவு 'நியாயமற்றது' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஒரே வகுப்பில் ஒன்றாக சேரும்போது கிருமிப் பரவல் அபாயம் அதிகமாகும் என்றும் மனு வாசகங்கள் தெரிவித்தன.
பல்கலைக்கழக படிப்புக்கு முந்திய ஓராண்டு அல்லது ஈராண்டு புகுமுக வகுப்பு ஆயத்த பாடத் திட்டங்களை மெட்ரிகுலேஷன் துறை வழங்கி வருகிறது. இதற்கான தேர்வுகள் அடுத்த வாரம் ஜனவரி 6 முதல் 13 வரை நடக்க உள்ள தாக அத்துறையின் அதிகாரி ஒருவர் கூறினார்.
மேலும் வரும் திங்கட்கிழமை (ஜனவரி 4) கல்லூரிகள் திறக்கப்
படுவதாகவும் அதற்கான ஏற்பாடு கள் சுகாதார அமைச்சின் கொவிட்-19 தொடர்பான விதிமுறைகளுக்கு இணங்க செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.

