1,800 ரோஹிங்கியா அகதிகள் தொலைதூர தீவுக்கு வெளியேற்றம்

1,800 ரோஹிங்கியா அகதிகள் தொலைதூர தீவுக்கு வெளியேற்றம்

1 mins read
72593785-cb5d-4faa-99c6-ab9bf7926dcb
சிட்டகாங் துறைமுகத்திலிருந்து கிளம்பிய கடற்படைக் கப்பலில் காணப் பட்ட ரோஹிங்கியா அகதிகள். ஏழு கப்பல்களில் 1,804 அகதிகள் கண்காணா தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். படம்: ஏஎஃப்பி -

இரண்டாம் கட்டமாக ரோஹிங்கியா அக­தி­களை நாட்­டை­விட்டு வெளி­யேற்றி தொலை­தூர தீவுக்கு அனுப்­பும் பணியை பங்­ளா­தேஷ் நேற்று தொடங்­கி­யது.

வங்­காள விரி­கு­டா­வில் அமைந்­துள்ள தாழ்­வான பாசான் சார் தீவில் வெள்­ளம் சூழும் அபா­யம் இருப்­ப­தால் அக­தி­களை அங்கு அனுப்ப வேண்­டாம் என மனி­த­நேய அமைப்­பு­கள் விடுத்த வேண்­டு­கோள்

­க­ளை­யும் மீறி பங்­ளா­தேஷ் அரசு வெளி­யேற்­றும் நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்டு வரு­கிறது.

ஏழு கப்­பல்­களில் 1,804 ரோஹிங்கியா அக­தி­கள் ஏற்­றப்­பட்டு தீவுக்­குக் கொண்டு செல்­லப்­ப­டு­வ­தாக பங்­ளா­தேஷ் கடற்­படை தள­பதி அப்­துல்லா அல் மாமுன் சவுத்ரி கூறினார்.

அந்­தத் தீவுக்கு முன்­னரே சென்று சேர்ந்த அவர், அக­தி­களை வர­வேற்­ப­தற்­கான ஏற்­பா­டு­கள் தயா­ராக இருப்­ப­தா­கச் சொன்­னார். விருப்­பத்­தின் பேரி­லேயே தீவுக்­குச் செல்­வ­தாக அக­தி­களில் சிலர் ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னத்­தி­டம் கூறி­னர்.

பங்­ளா­தேஷ் முதற்­கட்­ட­மாக 1,600க்கும் அதி­க­மான ரோஹிங்­ கியா அகதிகளை இம்­மா­தத் தொடக்­கத்­தில் அந்­தத் தீவுக்­குக் கொண்டு சென்று அமர்த்­தி­யது.