கொவிட்-19 கிருமித் தொற்றால் அறிவிக்கப்பட்ட மரண எண்ணிக்கையைக் காட்டிலும் மும்முடங்கு அதிகம் பேர் மாண்டிருப்பதாக ரஷ்ய அதிகாரிகள் ஒப்புக்கொண்டு உள்ளனர்.
முந்திய ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை ரஷ்யாவில் 229,700 பேர் அதிகமாக உயிரிழந்ததாக ரஷ்ய புள்ளிவிவரத் துறை தெரிவித்தது.
இவர்களில் 81 விழுக்காட்டிற்கும் மேலான மரணங்கள் கொவிட்-19 பரவல் காலத்தில் நிகழ்ந்ததாக ரஷ்ய துணைப் பிரதமர் டாட்டியானா கோலிகோவா கூறினார்.
அந்த விகிதப்படி 186,000க்கும் மேற்பட்ட ரஷ்யர்கள் கொவிட்-19க்கு பலியாகினர்.
ஆனால், அதிகார பூர்வமாகப் பதிவான கொவிட்-19 மரண எண்ணிக்கை 55,265 மட்டுமே.
உண்மையாக பதிவான எண்ணிக்கைப்படி உலகளவில் அதிக கொவிட்-19 மரணங்கள் நிகழ்ந்த நாடுகளின் பட்டியலில் ரஷ்யா மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது.

