இலங்கையில் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு வெளிநாட்டுப் பயணிகள் முதன்முறையாக வந்திறங்கி உள்ளனர்.
உக்ரேனில் இருந்து 185 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் கொழும்பு அருகே ராஜபக்சே அனைத்துலக விமான நிலையத்தில் திங்கட்கிழமை தரை இறங்கியது.
கொவிட்-19 கிருமி தொற்றவில்லை என்பதற்கான சான்றிதழை உக்ரேன் விமான நிலையத்தில் சமர்ப்பித்த பின் விமானத்தில் அனுமதிக்கப்பட்ட பயணிகள், கொழும்பு வந்திறங்கிய பின்னர் கிருமிப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட கட்டுப் பாடுகளை இலங்கை படிப்படி யாகத் தளர்த்தி வருகிறது.

