அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு தேர்வாகியிருந்த லியூக் லெட்லோ கொவிட்-19ஆல் உயிரிழப்பு

அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு தேர்வாகியிருந்த லியூக் லெட்லோ கொவிட்-19ஆல் உயிரிழப்பு

1 mins read
e5554b02-51c6-40a6-8264-e0060456dc17
அமெரிக்காவின் லூசியானா தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்கு அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 41 வயதான லியூக் லெட்லோ கொவிட்-19 பாதிப்பால் நேற்று (டிசம்பர் 29) உயிரிழந்தார். படம்: LUKE LETLOW/FACEBOOK -

அமெரிக்காவின் லூசியானா தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்கு அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 41 வயதான லியூக் லெட்லோ கொவிட்-19 பாதிப்பால் நேற்று (டிசம்பர் 29) உயிரிழந்தார்.

லூசியானாவின் 5வது மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த, குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அவர், வரும் ஞாயிற்றுக்கிழமை பதவி ஏற்க இருந்தார்.

திரு லியூக்கின் மறைவுச் செய்தியை லூசியானா ஆளுநர் ஜான் பெல் எட்வர்ட்ஸ் தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்தார்.

திரு லியூக்குக்கு ஜூலியா பார்ன்ஹில் லெட்லோ எனும் மனைவியும் இரண்டு குழதைகளும் இருக்கின்றனர்.

கொவிட்-19க்கு பலியான முதல் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் அவர்.

அமெரிக்காவில் கிருமித்தொற்று பெருகிவரும் நிலையில் அங்கு இதுவரை 19,526,228 கிருமித்தொற்று சம்பவங்களும் 337,918 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. உலக அளவில் கொவிட்-19ஆல் அமெரிக்காதான் ஆக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காநாடாளுமன்ற உறுப்பினர்