ஆஸ்ட்ரஸெனிகா-ஆக்ஸ்ஃபர்ட் தடுப்பூசிக்கு பிரிட்டன் ஒப்புதல்

ஆஸ்ட்ரஸெனிகா-ஆக்ஸ்ஃபர்ட் தடுப்பூசிக்கு பிரிட்டன் ஒப்புதல்

1 mins read
358324c0-9773-4088-8031-924031747db8
படம்: ஏஎஃப்பி -

குளிர்­கா­லத்­தில் சிக்­கி­யுள்ள பிரிட்­டன், அதி­க­ள­வில் தொற்­றக்­கூ­டிய ஆற்­றல் கொண்ட புது வகை கொரோனா கிரு­மி­யு­டன் போரிட்­டுக்­கொண்­டி­ருக்­கிறது.

இதற்­கி­டையே, ஆக்ஸ்­ஃபர்ட் பல்­க­லைக்­க­ழ­க­மும் ஆஸ்ட்­ர­ஸெனிகா நிறு­வ­ன­மும் உரு­வாக்­கிய தடுப்­பூ­சிக்கு பிரிட்­டன் அதன் ஒப்­பு­தலை வழங்­கி­யுள்­ளது.

அவ­ச­ர­கால விநி­யோ­கத்­திற்­கான ஒப்­பு­தல் தடுப்­பூ­சிக்கு வழங்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் ஒரு­வர் இரு முறை அதைப் போட்­டுக்­கொள்ள வேண்­டும் என்­ப­தா­க­வும் ஆஸ்ட்­ர­ஸெ­னிகா குறிப்­பிட்­டி­ருந்­தது.

பிரிட்­டன் 100 மில்­லி­யன் முறை போடு­வ­தற்­கு­ரிய தடுப்­பூசி மருந்து அள­வைக் கோரி­யுள்­ளது.

எளி­தில் தொற்­றும் ஆற்­றல், புதி­தாக உரு­வெ­டுத்­துள்ள கொரோனா கிருமி வகைக்கு உண்டு என்று அர­சாங்­க­மும் விஞ்­ஞா­னி­களும் கூறும் நிலை­யில், விமா­னப் பய­ணங்­க­ளை­யும் வர்த்­தகச் செயல்­பா­டு­க­ளை­யும் பல நாடு­கள் முடக்­கின.

புதிய கொரோனா கிருமி வகை­யின் தாக்­கம் குறித்து ஆராய்ந்து வரு­வ­தாக ஆஸ்ட்­ர­ஸெ­னி­கா­வும் தடுப்­பூசி உரு­வாக்­கும் மற்ற நிறு­வ­னங்­களும் தெரி­வித்­துள்­ளன. இருப்­பி­னும், கிரு­மிக்கு எதி­ராக உரு­வாக்­கப்­பட்ட தங்­க­ளின் தடுப்­பூ­சி­கள் செயல்­தி­ற­னு­டை­ய­தாக இருக்­கும் என்று அவை எதிர்­பார்க்­கின்­றன. கிரு­மிக்கு எதி­ரான தடுப்­பூ­சி­யின் ஒட்­டு­மொத்த செயல்­தி­றன் 70.4% என்று கூறப்­பட்­டது.

தடுப்­பூ­சிச் சோத­னை­யின் இறு­திக்­கட்ட முடி­வு­களில் தெளிவு இல்லை என்று முன்­ன­தாக ஆஸ்ட்­ர­ஸெ­னிகா-ஆக்­ஸ்ஃபர்ட் குழு மீது குறை­கூ­றப்­பட்­டது. இதை­ய­டுத்து, தடுப்­பூ­சிக்கு ஒப்பு­தல் வழங்­கப்­பட்­ட­தைக் குழு­வி­னர் வர­வேற்­றுள்­ள­னர்.