மலே­சி­யா­வின் பாகாங்கில் தொற்று அதிகரிப்பு

மலே­சி­யா­வின் பாகாங்கில் தொற்று அதிகரிப்பு

2 mins read
28964b4d-22d8-4692-9b80-fb13f3ddc3ad
படம்: ராய்ட்டர்ஸ் -

மலே­சி­யா­வின் பாகாங் மாநி­லத்­தில் உள்ள சிறைச்­சாலை ஒன்­றில் புதிய கொவிட்-19 நோய்த் தொற்­றுக் குழு­மம் அடை­யா­ளம் காணப்­பட்­டது. அத­னை­யடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தொற்று அதி­க­ரித்­துள்­ளது தெரியவந்துள்ளது.

டெம்­போக் மெம்­பகா கிரு­மித்­தொற்­றுக் குழு­மம் பெந்­தோங் மாவட்­டத்­தில் உள்­ளது. இங்கு புதிதாக 282 தொற்று பதி­வா­கி­யுள்­ளது. இது அந்த மாநி­லத்­தில் பதி­வான மொத்த கிரு­மித்­தொற்று எண்­ணிக்­கை­யான 288 உடன் ஒப்­பி­டும்­போது 98 விழுக்­கா­டா­கும்.

டிசம்­பர் 22ஆம் தேதி பாகாங் சிறைச்­சா­லை­யில் ஒரு­வ­ருக்கு கிரு­மித்­தொற்று இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டதைத் தொடர்ந்து டெம்­போக் மெம்­பகா கிரு­மித்­தொற்­றுக் குழு­மம் உரு­வா­னது. அதை­ய­டுத்து அங்கு 504 பேருக்கு கொவிட்-19 சோதனை மேற்­கொள்­ளப்­பட்­டது. இதனை சுகா­தா­ரத்­துறை தலைமை நிர்­வாகி நூர் ஹி‌ஷாம் அப்­துல்லா தெரி­வித்­தார்.

மலே­சி­யா­வில் நேற்று முந்­தைய நாள் நில­வ­ரப்­படி 1,925 புதிய கொரோனா தொற்­று­கள் பதி­வா­கி­யுள்­ளன. அவற்­றில் பாதி பேர் சிலாங்­கூர் மாநி­லத்­தின் கிள்ளான் பள்ளத்தாக்குப் பகு­தி­யைச் சேர்ந்­த­வர்­கள். சிலாங்­கூர் மாநி­லத்­தில் 747 புதிய கிரு­மித்­தொற்று பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இரண்­டா­வ­தாக கோலா­லம்­பூ­ரில் 360 புதிய தொற்­று­கள் பதி­வா­கி­யுள்­ளன. மூன்­றா­வது இடத்­தைப் பிடித்­துள்ள பாகாங் மாநி­லத்­தில் 288 புதிய தொற்­று­கள் பதி­வா­கி­யுள்­ளன.

"இப்­போது, நாங்­கள் 220 நோய்த்தொற்­றுக் குழு­மங்­க­ளைக் கண்­கா­ணித்து வரு­கி­றோம். அவற்­றில் 50 குழு­மங்­களில் நோய்த்­தொற்­றுப் பதிவு அதி­க­ரித்­துள்­ளது," என டாக்­டர் நூர் ‌ஹி‌ஷாம் கூறி­னார்.

மலேசியாவில்­ ப­தி­வான புதிய தொற்று 1,925ஐயும் சேர்த்­து அங்கு மொத்­தம் 108,615 பேர் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். நேற்று முன்­தி­னம் இந்­நோய்த்­தொற்­றுக்­கு இருவர் பலி­யா­யி­னர்.

மாண்ட இரு­வ­ருக்­கும் நாட்­பட்ட சிறு­நீ­ர­கக் கோளாறு, நீரி­ழிவு, உயர் இரத்த அழுத்­தம் போன்ற நோய்­கள் இருந்­ததாகக் கூறப்பட்டது. இவர்­க­ளை­யும் சேர்த்து கொரோனா பலி எண்­ணிக்கை 457 ஆக அதி­க­ரித்­துள்­ளது. தற்­போது 21,443 பேருக்கு சிகிச்சை அளிக்­கப்­ப­டு­கிறது. அவர்­களில் 10 பேர் வெளி­நா­டு­களுக்குச் சென்று வந்­த­வர்­கள்.

117 பேர் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர். அவர்­களில் 55 பேருக்கு உயிர் மூச்­சுக் கருவி பொருத்­தப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கான கொவிட்-19 சோத­னைக் கட்­ட­ணத்தை ஒரு­மு­கப்­படுத்த வேண்­டும் என்று அங்­குள்ள நிறு­வ­னங்­கள் அர­சாங்­கத்­தைக் கேட்­டுக்கொண்­டுள்­ளன.

மருந்­த­கங்­கள் இந்த வாய்ப்­பைப் பயன்­ப­டுத்தி அதிக லாபம் ஈட்­டும் போக்­கில் செயல்­ப­டு­வ­தாக நிறுவனங்கள் புகார் கூறுகின்றன.