சாலைக் குழிகளை 24 மணி நேரத்துக்குள் சரி செய்ய மலேசிய பணிகள் அமைச்சு கடப்பாடு

சாலைக் குழிகளை 24 மணி நேரத்துக்குள் சரி செய்ய மலேசிய பணிகள் அமைச்சு கடப்பாடு

1 mins read
a982476b-40ae-4615-ad4b-aa8ce2d9b9f2
படம்: தி ஸ்டார் -

முக்கிய சாலைகளில் இருக்கும் சிறிய சாலைக்குழிகள் பற்றி புகார் பெறப்பட்ட 24 மணி நேரத்துக்குள் அவற்றைச் சரி செய்ய கடப்பாடு கொண்டிருப்பதாக மலேசியாவின் பணிகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

'ஸீரோபாத்ஹோல்' பிரசாரத்தின் கீழ், மத்திய சாலைகளில் அத்தகைய குழிகள் 24 மணி நேரத்துக்குள் தற்காலிகமாக சரிசெய்யப்படும் வேளையில், 3 நாட்களுக்குள் முழுமையாக சரி செய்யப்படும் என்றது அமைச்சு.

அமைச்சர், பொதுமக்கள் என இரு தரப்பினர் அளிக்கும் புகார்களை வெவ்வேறு விதமாகக் கையாளுவதாக அரசாங்கத்தின் மீது விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து, இந்தத் தகவல்களை அமைச்சு வெளியிட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சிலாங்கூரின் பன்டிங்கில் உள்ள சீரற்ற சாலையில் மிதிவண்டியில் சென்றபோது தாம் கீழே விழுந்ததாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுதீன் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்ட சில மணி நேரத்துக்குள் பொதுப் பணித்துறை டுவிட்டர் வாயிலாகவே உடனடியாக மன்னிப்புக் கோரியதுடன், அந்த விபத்து நிகழ்ந்த பகுதியில் இருந்த சாலை 24 மணி நேரத்துக்குள் சரிசெய்யப்பட்டது.

அந்த நடவடிக்கையைப் பலரும் விமர்சித்து வந்தனர். மலேசியாவின் 2021 வரவுசெலவுத் திட்டத்தில் மத்திய சாலைகளைப் பராமரிக்க 1.09 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்