மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய கொரோனா நோயாளி

மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய கொரோனா நோயாளி

1 mins read
7869949a-df27-4e69-893f-0cfeec4ff09b
காரில் செல்வோருக்கு கொவிட்-19 பரிசோதனை செய்யும் சுகாதாரப் பணியாளர். படம்: ராய்ட்டர்ஸ் -

மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள தம்பின் மாவட்டத்தில் உள்ளது தம்பின் நகரம்.

அங்குள்ள தம்பின் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த கொவிட்-19 நோயாளி ஒருவர், திடீரென அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

நேற்று காலை 11.45 மணிக்கு அவர் மருத்துவமனை படுக்கையில் இருந்து காணாமல் போனது தெரியவந்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடைசியாக அந்த ஆடவர் பச்சை நிற டி-சட்டை அணிந்திருந்ததாக தம்பின் மாவட்ட போலிஸ் தலைவர் அனுவல் அப் வாகாப் கூறியதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்தது.

அவரை தேடும் முயற்சியில் போலிசார் இறங்கியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்