கொரோனா கிருமியால் நிகழும் உயிரிழப்புகள் அமெரிக்காவில் இன்னும் குறைந்தபாடில்லை. ஒவ்வொரு நாளும் பல ஆயிரம் பேரின் உயிர் பறிபோகிறது. செவ்வாய்க்கிழமை 3,700க்கும் மேற்பட்ட அமெரிக்க மக்கள் கிருமித்தொற்றுக்கு பலியான நிலையில் புதன்கிழமை நிலவரம் அதைவிட மோசமாக மாறிவிட்டது.
சிங்கப்பூர் நேரம் இன்று காலை 9.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 3,927 பேர் உயிரிழந்துவிட்டதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அன்றாடம் பதிவாகும் உயிரிப்பலி எண்ணிக்கையில் இதுவே ஆக அதிகம்.
குளிர்காலம் என்பதாலும் ஆண்டிறுதி விடுமுறையில் பலரும் ஒன்று கூடுவார்கள் என்பதாலும் கிருமித்தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அமெரிக்க தொற்றுநோயியல் நிபுணர் ஆண்டனி ஃபவுசி கடந்த ஞாயிற்றுக்கிழமை கூறியது போலவே நிகழ்ந்து வருகிறது.
அடுத்து வரும் நாள்கள் மிகவும் மோசமானவையாக இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார். அன்றாட மரண எண்ணிக்கை இந்த வாரமே 4,000ஐ தொடும் அபாயம் அமெரிக்காவில் நீடிக்கிறது.
புதிதாக பதிவான எண்ணிக்கையையும் சேர்த்து பெருந்தொற்று தொடங்கியது முதல் அமெரிக்கா வில் இதுவரை மாண்டோரின் எண்ணிக்கை 341,845 ஆனது.
மரணம் தவிர, கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அங்கு 19,715,899.
கிருமிப் பரவல் வேகத்தைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடுவதைத் தீவிரப்படுத்தி வருகிறது அமெரிக்கா. இருப்பினும் போது மான வேகத்தில் அது நடைபெற வில்லை என்று கூறப்படுகிறது.
நியூயார்க்கில் புதன்கிழமை வரை 2.7 மில்லியன் பேருக்கு மட் டும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
ஆண்டு முடிவதற்குள் 20 மில்லி யன் பேருக்கு தடுப்பூசி போட அர சாங்கம் இலக்கு வகுத்திருந்தது.
ஆனால் ஆண்டு முடிய ஒரு நாள் இருந்து நிலையில் (டிசம்பர் 30) போடப்பட்ட தடுப்பூசி விகிதம், வகுக்கப்பட்ட இலக்கில் 13.5 விழுக் காடு என்று புளூம்பெர்க் செய்தி நிறுவனத்தின் தடுப்பூசி தொடர் பான தகவல் தெரிவித்தது.
"தடுப்பூசிகள் ஒவ்வொரு நாளும் அலமாரிகளில் தூங்குவதால் மக்களின் உயிர் அன்றாடம் அதி களவில் பறிபோகிறது," என்று காலிஃ போர்னியா பல்கலைக்கழக மருந்தியல் துறைத் தலைவர் டாக்டர் ராபர்ட் வாச்சர் கூறினார்.
இந்த அம்சத்தில் ஒவ்வொரு வரும் இைணந்து தங்களுக்கான பங்கைச் செய்யாவிடில் ஏராளமான பொருட்செலவில் மேற்கொள்ளப் பட்ட முயற்சி வீணாகிவிடும் என்று அவர் எச்சரித்தார்.
டிசம்பர் மாதம் அமெரிக்காவுக்கும் மரணம் நிறைந்த மாதமாகிவிட்டது. அந்த மாதத்தின் 26 நாட்களில் மட்டும் சுமார் 63,000 ஆயிரம் பேர் கிருமித்தொற்றால் மாண்டுவிட்டனர்.
மருத்துவமனைகள் கொவிட்-19 நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. சில மருத்துவமனைகளில் பிராணவாயு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.
குறிப்பாக, கலிஃபோர்னியா மாநிலத்திற்குட்பட்ட லாஸ் ஏஞ்சலிஸ் வட்டார மருத்துவமனைகளில் சுமார் 7,200 நோயாளிகள் சிகிச்சை பெறுவதால் போதுமான அளவுக்கு பிராணவாயு இன்றி அந்த மருத்துவ மனைகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அவற்றில் புதிதாக சேரும் நோயாளிகளின் எண்ணிக்கை இரண்டே மாதங்களில் கிட்டத்தட்ட ஆயிரம் மடங்கிற்கும் மேல் அதிகரித்துவிட்டது.

