கொரோனா கிருமியைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வரும்வேளையில் தைவான் திறம்பட அதனைக் கையாண்டுள்ளது. கடுமையான தனிமைப்படுத்துதல் நடவடிக்கைகளைக் கொண்டு கொரோனாவைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது.
இருப்பினும் தைவான், அதன் மக்களை நோய்த்தொற்றில் இருந்து பாதுகாக்க 20 மில்லியன் தடுப்பூசி மருந்துகள் வாங்க ஒப்புதல் அளித்துள்ளது. அவற்றில் 10 மில்லியன் ஆஸ்ட்ரஸெனிகா தடுப்பூசி மருந்துகளாகும்.
தைவானில் கிருமித்தொற்றால் மொத்தம் 798 பேர் பாதிக்கப்பட்டனர். ஏழு பேர் உயிரிழந்தனர்.

