சிட்னி: ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் அங்கு முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பக்கத்து மாநிலமான விக்டோரியாவில் நேற்றைய நிலவரப்படி மேலும் 10 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
உடற்பயிற்சிக் கூடங்களில் நடத்தப்படும் பயிற்சி வகுப்புகள் குறைக்கப்படும் என்று நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் கிளேடிஸ் பெரிஜிகிலியன் அறிவித்தார்.
மேலும், இரவு விடுதிகளில் பாடல்கள், நடனங்கள் ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருமணங்கள், இறுதிச் சடங்கு கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றுக்குச் செல்வோரின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், வரும் வியாழக்கிழமை தொடங்க இருக்கும் ஆஸ்திரேலியா-இந்தியா கிரிக்கெட் டெஸ்ட் போட்டி திட்டமிட்டபடி தொடரும்.

