மலேசியாவில் சாலைக் குழியால் ஏற்பட்ட விபத்து; மோட்டார் சைக்கிளோட்டி மரணம்

மலேசியாவில் சாலைக் குழியால் ஏற்பட்ட விபத்து; மோட்டார் சைக்கிளோட்டி மரணம்

1 mins read
11d22116-cd13-4b15-9689-ad0f0c822517
படம்: தி ஸ்டார் -

மலேசியாவின் ஜாலான் தெங்காவில் மோட்டார் சைக்கிளில் சென்ற 75 வயது ஆடவர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

சாலையில் இருந்த குழியில் அவரது மோட்டார் சைக்கிள் இறங்கியதையடுத்து, கட்டுபாடு இழந்த அவரது மோட்டார் சைக்கிள் கீழே விழுந்ததாக போலிசாரின் முதற்கட்ட விசாரணை தெரிவிக்கிறது.

இன்று காலை 7.30 மணியளவில் சம்பவம் குறித்து தகவல் அறிந்ததாக கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத்துறையின் தலைமை துணை ஆணையர் ஸுல்கிஃப்லி யாஹ்யா தெரிவித்தார்.

கீழே விழுந்த ஹோ யான் யீ எனும் அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்