ஜோகூரில் தொடரும் மழை; 7 மாவட்டங்களின் நிவாரண மையங்களில் 5,000க்கு மேற்பட்டோர் தஞ்சம்

ஜோகூரில் தொடரும் மழை; 7 மாவட்டங்களின் நிவாரண மையங்களில் 5,000க்கு மேற்பட்டோர் தஞ்சம்

1 mins read
d93f65e0-2de0-4c80-a72d-5e16a7636e08
ஜோகூரின் கம்போங் லவுட் ஸ்கூடாயில் நேற்று மழை வெள்ளத்தில் வீடுகள் மூழ்கின. படம்: தி ஸ்டார் -

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஜோகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,000ஐ கடந்துள்ளது. ஜோகூரில் 7 மாவட்டங்களில் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு 5,818 பேர் சென்றுள்ளதாக ஜோகூர் மாநிலத்தின் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் குழுவின் தலைவரான திரு ஆர்.வித்யநாதன் இன்று காலை 8 மணியளவில் தெரிவித்தார்.

ஜோகூர் பாரு, கோத்தா திங்கி, குளுவாங், மெர்சிங், போன்டியன், குலாய், பத்து பகாட் ஆகிய மாவட்டங்களில் 56 தற்காலிக நிவாரண மையங்கள் அமைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஜோகூர் பாருவில் ஆக அதிகமாக 2,452 பேரும் குளுவாங்கில் 1,826 பேரும் கோத்தா திங்கியில் 868 பேரும் குலாயில் 581 பேரும் மெர்சிங்கில் 57 பேரும் பத்து பகாட்டில் 28 பேரும் போன்டியனில் 6 பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாக திரு வித்யநாதன் குறிப்பிட்டார்.

வெள்ளம் காரணமாக ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும் வெள்ள நீர் மட்டம் 0.2 மீட்டர் வரை உயர்ந்ததால் FT003 ஜாலான் ஜோகூர் பாரு - கோத்தா பெர்சிங்கில் அங்கு சாலை மூடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, செகாமட், பத்து பகாட், குளுவாங், மெர்சிங், போன்டியன், குலாய், கோத்தா திங்கி, ஜோகூர் பாரு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழைப்பொழிவு இருக்கும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்