ஜப்பான் அரண்மனைக்குள் புகுந்த 29 வயது ஆடவர் கைது

ஜப்பான் அரண்மனைக்குள் புகுந்த 29 வயது ஆடவர் கைது

1 mins read
e5c51067-00e2-4738-918a-d018a1f26f18
படம்: ஏஎஃப்பி -

ஜப்பான் மன்னர் நருஹிட்டோவின் அரண்மனைக்குள் நுழைந்த சந்தேகத்தின் பேரில் 29 வயது ஆடவர் இன்று (ஜனவரி 3) கைது செய்யப்பட்டார்.

அவர் அரண்மனைக்குள் புகுந்து சுமார் 2 மணி நேரத்துக்குப் பிறகே அந்த ஆடவர் அங்கிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பொதுவாக காவல் அதிகம் இருக்கக்கூடிய அகசாகா அரச குடும்ப குடியிருப்பு வளாகத்துக்குள், அருகில் உள்ள விருந்தினர் மாளிகை வழியாக நேற்றிரவு அந்த ஆடவர் புகுந்ததாக ஃபுஜி நியூஸ் நெட்வொர்க் குறிப்பிட்டது.

இளவரசர் யுரிக்கோ, மன்னர் நருஹிட்டோவின் மூத்த உறுப்பினர் ஆகியோரின் குடியிருப்புக்கு அருகில் காவலர்களால் அவர் கண்டுபிடிக்கப்பட்டார்.

காவலர்களிடம் சிக்கிய அந்த ஆடவர், அரச குடும்பத்தினரைக் காண விரும்பி அங்கு நுழைந்ததாகக் குறிப்பிட்டார்.

தந்தை அரசுரிமையைத் துறந்த பிறகு 2019ஆம் ஆண்டில் அரியணை ஏறிய மன்னர் நருஹிட்டோ, தம் மனைவி மசாகோவுடன் சேர்ந்து புத்தாண்டு செய்தியை முதன் முறையாக காணொளிச் செய்தியாக மக்களிடம் பகிர்ந்துகொண்டனர்.

குறிப்புச் சொற்கள்