அமெரிக்காவில் ஆக அதிகமாக 277,000 பேருக்கு ஒரே நாளில் கிருமித்தொற்று பதிவானது. நேற்று பதிவான இந்த எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகம்.
கொவிட்-19 மிக மோசமாகப் பாதித்துள்ள அமெரிக்காவில் 20.4 மில்லியன் மக்கள் தொற்றுக்கு ஆளான நிலையில், சுமார் 350,000 பேர் உயிரிழந்தனர்.
அண்மையில் கொரோனா தொற்று அங்கு மிகவும் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க அரசாங்க ஆய்வாளர் அந்தோனி ஃபௌசி, அங்கு கிருமித்தொற்று உச்சத்தை எட்டவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் 4.2 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு ஏற்கெனவே முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், 13 மில்லியன் டோஸ்கள் விநியோகிக்கப்பட்டு உள்ளன. 2020ஆம் ஆண்டு இறுதிக்குள் 20 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று அதிபர் டிரம்ப் உறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

