விமான விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 2020ல் அதிகரிப்பு

விமான விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 2020ல் அதிகரிப்பு

1 mins read
4a4aa957-57b6-4c9e-b22a-3af533d59ee0
படம்: ராய்ட்டர்ஸ் -

விமானப் பயணங்களுக்கு அனைத்துலக அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, அந்தத் துறை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தாலும், 2020ஆம் ஆண்டில் பெரிய வர்த்தக விமான விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 299 ஆக உயர்ந்துள்ளது.

இருப்பினும் விபத்துக்குள்ளான விமானங்களின் எண்ணிக்கை 50 விழுக்காடு குறைந்திருப்பதாக டச்சு ஆய்வு நிறுவனம் ஒன்று நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த ஆண்டில் பெரிய வர்த்தக விமான விபத்துகளின் எண்ணிக்கை 40 என்றும் அவற்றில் 299 பேர் உயிரிழந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டில் 86 விபத்துகள் நிகழ்ந்தன; அவற்றில் 8 விபத்துகளில் 257 பேர் உயிரிழந்தனர்.

கடந்த ஆண்டு ஜனவரியில் ஈரானிய ஆகாயவெளியில் உக்ரேன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 176 பேர் கொல்லப்பட்டதே அந்த ஆண்டில் நிகழ்ந்த பெரும் விபத்து என்று தெரிவிக்கப்பட்டது.

அதற்கு அடுத்தபடியாக மே மாதத்தில் பாகிஸ்தான் விமான விபத்தில் 98 பேர் கொல்லப்பட்டனர்.

2017ஆம் ஆண்டில் ஆகக் குறைவாக 2 பெரிய விமான விபத்துகள் மட்டுமே நிகழ்ந்தன; அவற்றில் 13 பேர் உயிரிழந்தனர்.

அண்மைய ஆண்டுகளில் விமான விபத்துகளின் எண்ணிக்கை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
விபத்துஅதிகரிப்பு