கருணை அடிப்படையில் பயணம் குறித்து சிங்கப்பூருடன் மலேசியா பேச்சுவார்த்தை

கருணை அடிப்படையில் பயணம் குறித்து சிங்கப்பூருடன் மலேசியா பேச்சுவார்த்தை

1 mins read

ஜோகூர் பாரு: மலே­சி­யர்­கள் கருணை அடிப்­ப­டை­யில் எல்­லை தாண்­டிய பய­ணங்­களை மேற்­கொள்ள சுகா­தார நடை­மு­றை­க­ளைத் தர­நி­லைப்­ப­டுத்த சிங்­கப்­பூ­ரு­டன் மலே­சியா பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­வ­தாக அந்­நாட்டு வெளி­யு­றவு அமைச்­சர் ஹிஷா­மு­தீன் ஹுசேன் தெரி­வித்­துள்­ளார்.

சிங்­கப்­பூ­ரில் வேலை செய்­யும் மலே­சி­யர்­கள், கருணை அடிப்­ப­டை­யில் நாடு திரும்ப விரும்­பி­னால் மேல்­மு­றை­யீடு செய்ய வேண்­டி­யுள்­ளது.

"குடும்­பத்­தில் யாரா­வது நோய்­வாய்ப்­பட்டு இருந்­தாலோ மர­ணம் அடைந்­தாலோ தனிப்­பட்ட அடிப்­பை­யில் தற்­போது சுகா­தார நடை­முறை இடம்­பெ­று­கிறது.

"இந்த நடை­மு­றை­யைத் தர­நிலைப்­ப­டுத்த நாங்­கள் சிங்­கப்­பூ­ரு­டன் பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கி­றோம்," என்று அமைச்­சர் ஹிஷா­மு­தீன் நேற்று முன்­தி­னம் கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரில் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளும் மலே­சி­யர்­கள், அதற்­கான சான்­றி­த­ழைக் காட்­டும் பட்­சத்­தில் எதிர்­கா­லத்­தில் நாடு திரும்ப அனு­ம­திக்­கப்­ப­டு­வார்­களா என்­பது குறித்­தும் அவ­ரி­டம் கேட்­கப்­பட்­டது. அதற்­குப் பதி­ல­ளித்த திரு ஹிஷா­மு­தீன், இந்த விவ­கா­ரம் சுகா­தார அமைச்­சின் பார்­வைக்­குக்­கீழ் வரு­வ­தா­கச் சொன்­னார்.

"சிங்­கப்­பூ­ரில் பயன்­ப­டுத்­தப்­படும் தடுப்­பூசி மருந்து மலே­சி­யாவில் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டு­கி­றதா இல்லையா என்­பதை முடி­வெ­டுக்­கும் அதி­கா­ரம் வெளி­யு­றவு அமைச்­சிற்கு இல்லை.

"அது­கு­றித்து சுகா­தார அமைச்சு முடி­வெ­டுக்­கும். அதன் முடி­வுக்கு நாங்­கள் இணங்­கு­வோம்," என்­றார் அவர்.