ஹாங்காங்: புதிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 50 பேருக்கு மேல் கைது

ஹாங்­காங் அர­சை ஆட்­சி­யில் இருந்து அகற்ற முயன்­ற­தா­கக் கூறி, அர­சி­யல்­வா­தி­கள், ஜன­நாயக ஆத­ரவு ஆர்­வ­லர்­கள் என ஐம்­ப­துக்­கும் மேற்­பட்­டோர் நேற்­று கைது செய்­யப்­பட்­ட­னர். ஆறு மாதங்­க­ளுக்­கு­முன் இயற்­றப்­பட்ட, சர்ச்­சைக்­கு­ரிய புதிய பாது­காப்­புச் சட்­டத்­தின்­கீழ் அந்­தக் கைது நட­வ­டிக்­கை­கள் இடம்­பெற்­றன.

கடந்த செப்­டம்­ப­ரில் இடம்­பெற­ இருந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லுக்­கான எதிர்க்­கட்சி வேட்­பா­ளர்­களைத் தேர்ந்­தெ­டுப்பதற்காக அதி­கா­ர­பூர்­வ­மற்ற முறை­யில் அவர்­கள் கூடி­ய­தா­கச் சொல்­லப்­பட்­டது. பின்­னர் கொவிட்-19 பர­வலைக் கார­ணம் காட்டி அந்­தத் தேர்­தல் 2021 செப்­டம்­ப­ருக்­குத் தள்­ளி­வைக்­கப்­பட்­டது. அவர்­க­ளின் செயல்­கள் ‘கீழ­றுக்­கும்’ வகை­யில் இருந்­தன என்று ஹாங்­காங் பாது­காப்பு அமைச்­சர் தெரி­வித்­துள்­ளார்.

கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் சட்ட வல்­லு­ந­ர் பென்னி டையும் ஒரு­வர். சட்ட மறுப்பு இயக்­கத்­திற்­காக 2014ல் குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்ட திரு டையின் எண்­ணத்­தில்­ உதித்ததுதான் கடந்த ஜூலை­யில் இடம்பெற்ற அதி­கா­ர­பூர்­வ­மற்ற எதிர்க்­கட்சி வேட்­பா­ளர் தேர்­தல் எனச் சொல்­லப்­பட்­டது. அத்­தேர்­தல் ஏற்­பாட்­டா­ளர்­களின் பொரு­ளா­ள­ரா­கச் செயல்­பட்­ட­தா­கக் கூறப்­படும் ஜான் கிளேன்சி எனும் அமெ­ரிக்க வழக்­க­றி­ஞ­ரும் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். இதனால் அமெ­ரிக்கா - சீனா இடை­யி­லான மோதலை மேலும் அதி­க­ரிக்­கலாம்.

திரு கிளேன்சி பணி­யாற்றி வரும் சட்ட நிறு­வ­னம்­தான், புதிய சட்­டத்­திற்கு எதி­ரான போராட்­டங்­கள் தொடர்­புடைய நூற்­றுக்­க­ணக்­கான வழக்­கு­க­ளைக் கையாண்­டது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இத­னி­டையே, புதிய அமெ­ரிக்க அதி­ப­ரா­கப் பொறுப்­பேற்­க­இருக்கும் ஜோ பைடன் அடுத்த வெளி­யு­றவு அமைச்­ச­ரா­கத் தேர்வு செய்­யப்­பட்­டு உள்ள ஆன்­டனி பிளிங்­கன், ஹாங்­காங் கைது நட­வ­டிக்­கை­க­ளுக்­குக் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளார். “உல­க­ளா­விய உரி­மை­க­ளுக்­கா­கத் துணிச்­ச­லு­டன் குரல் கொடுத்து வரு­வோர் மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­தல் இது,” என்று அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

பைடன் - ஹாரிஸ் அரசாங்கம் ஹாங்காங் மக்களுக்குத் துணை நிற்கும் என்றும் ஜனநாயகத்தின் மீதான சீனாவின் ஒடுக்குமுறையை எதிர்க்கும் என்றும் பிளிங்கன் அறிவித்துள்ளார். இந்த நிலை­யில், தனக்கு எதி­ராக கீழ­றுப்பு வேலை­களில் ஈடு­ப­டு­வோ­ரைத் தடுப்­ப­தற்­குக் கைது நட­வ­டிக்கை அவ­சி­ய­மான ஒன்று எனச் சீனா தெரிவித்து இருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!