டாக்டர் மகாதீரின் புதிய கட்சிக்கான பதிவு விண்ணப்பம் தள்ளுபடியானது

டாக்டர் மகாதீரின் புதிய கட்சிக்கான பதிவு விண்ணப்பம் தள்ளுபடியானது

1 mins read
209db8d3-9864-43e4-8455-abfd91213a0c
டாக்டர் மகாதீர். படம்: ராய்ட்டர்ஸ் -

மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது, புதிதாக பெஜுவாங் என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்குவதற்கு விண்ணப்பித்திருந்தார்.

அந்த விண்ணப்பத்தை மலேசியாவின் சமூக அமைப்புகளுக்கான பதிவாளர் அலுவலகம் தள்ளுபடி செய்தது.

இதனை பெஜுவாங் வழக்கறிஞர் மியோர் நோர் ஹைடிர் சுகைமி இன்று உறுதி செய்தார்.

அந்தக் கடிதத்தின் விவரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அது குறித்து பின்னர் அறிக்கை வெளியிடப்படும் என்று கூறினார்.

2019 மே மாதம் 'பிரிபூமி பெர்சத்து மலேசியா' என்ற கட்சியில் இருந்து மகாதீரும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் நீக்கப்பட்டனர்.

அதனையடுத்து அவர்கள் ஐவரும் இந்தக் கட்சியைத் தொடங்கினர்.

குறிப்புச் சொற்கள்