கொவிட்-19: மலேசியாவில் 24 மணி நேரத்தில் 16 பேர் மரணம்; கூடுதல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அறிவிக்கப்படலாம்

கொவிட்-19: மலேசியாவில் 24 மணி நேரத்தில் 16 பேர் மரணம்; கூடுதல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அறிவிக்கப்படலாம்

1 mins read
fe24d83b-b6a7-4214-85e5-4162f55888ad
கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. நாட்டின் சில பகுதிகளில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை போன்ற கூடுதல் நடவடிக்கைகளை எடுப்பது பற்றி திங்கட்கிழமை பிரதமர் முகமது யாசின் அறிவிக்கக்கூடும் என மூத்த (பாதுகாப்பு) அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் (படம்) இன்று தெரிவித்தார் . படம்: தி ஸ்டார் -

மலேசியாவில் ஆக அதிகமாக இன்று (ஜனவரி 8) ஒரே நாளில் 16 பேர் கொவிட்-19ஆல் உயிரிழந்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை தேவைப்படுவோர், செயற்கை சுவாசக் கருவி தேவைப்படுவோர் ஆகியோரின் எண்ணிக்கையும் மிக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 2,643 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று பதிவான 3,027 என்ற எண்ணிக்கையைவிட இது சற்றுக் குறைவு.

மலேசியாவில் இதுவரை 537 பேர் உயிரிழந்தனர்.

இதுவரை இல்லாத அளவாக 170 கொவிட்-19 நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 82 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி தேவைப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மலேசியாவில் தற்போது வீசிவரும் கொவிட்-19 மூன்றாவது அலை மிகவும் தீவிரமடைந்துள்ளது. இதுவரை அங்கு 131,108 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. நாட்டின் சில பகுதிகளில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை போன்ற கூடுதல் நடவடிக்கைகளை எடுப்பது பற்றி திங்கட்கிழமை பிரதமர் முகமது யாசின் அறிவிக்கக்கூடும் என மூத்த (பாதுகாப்பு) அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்