டிரம்ப்பை அதிபர் பதவியிலிருந்து அகற்ற நெருக்குதல் அதிகரிப்பு

டிரம்ப்பை அதிபர் பதவியிலிருந்து அகற்ற நெருக்குதல் அதிகரிப்பு

2 mins read
640e4a0b-0e62-459e-9459-941687bd1e8a
படம்: ஏஎஃப்பி -

அமெ­ரிக்­கத் தலை­ந­கர் வாஷிங்­டனில் நாடா­ளு­மன்­றக் கட்­ட­டத்தை முற்­று­கை­யிட்­டும் அத­னுள் நுழைந்­தும் அதி­பர் டோனல்ட் டிரம்ப்­பின் ஆத­ர­வா­ளர்­கள் வன்­மு­றை­யில் ஈடு­பட்­டதை அடுத்து, அவரை உட­னடி­யா­கப் பத­வி­யில் இருந்து நீக்க வேண்­டும் என ஜன­நா­ய­கக் கட்­சி­யி­னர் நெருக்­கு­தல் அளித்து வரு­கின்­ற­னர்.

துணை அதி­பர் மைக் பென்­சும் அமைச்­ச­ர­வை­யும் அதி­பர் பொறுப்­பில் இருந்து டிரம்ப்­பை அகற்ற நட­வ­டிக்கை எடுக்­கா­வி­டில், டிரம்ப் தம் பத­விக்­கா­லத்­தில் செய்த குற்றம் தொடர்­பாக விசா­ரணை நடத்­துவதற்கான நடை­மு­றை­களைத் தொடங்க பிர­தி­நி­தி­கள் சபை­யின் நாய­கர் நான்சி பெலோசி­யும் செனட் சபை­யின் ஜன­நா­ய­கக் கட்­சித் தலை­வர் சக் ஸ்கூ­ம­ரும் அழைப்பு விடுத்­துள்­ள­னர்.

அதி­பர் டிரம்ப் கிளர்ச்­சி­யைத் தூண்­டி­விட்­ட­தா­கக் குற்­றம் சாட்­டிய அவர்­கள், "அதி­ப­ரின் அபா­ய­க­ர­மான, தேச விரோத நட­வ­டிக்­கை­களை அடுத்து அவர் உட­ன­டி­யா­கப் பதவி­நீக்­கம் செய்­யப்­பட வேண்­டும்," என்­றும் வலி­யு­றுத்­தி­யுள்­ள­னர்.

அதி­பர் தேர்­த­லில் ஜோ பைட­னின் வெற்­றியை அங்­கீ­க­ரித்து, சான்­றி­தழ் வழங்­கும் விழா கடந்த புதன்­கி­ழமை நாடா­ளு­மன்­றத்­தில் இடம்­பெற்­றது. அப்­போது, டிரம்ப் ஆத­ர­வா­ளர்­கள் ஆயி­ரக்­க­ணக்­கில் அங்கு திரண்டு நாடா­ளு­மன்­றத்­திற்­குள் நுழைய முயல, போலி­சா­ருக்­கும் அவர்­க­ளுக்­கும் இடையே தள்­ளு­முள்ளு ஏற்­பட்­டது. இத­னால் போலி­சார் தடி­யடி நடத்­தி­யும் கண்­ணீர்ப் புகைக்­குண்­டு­களை வீசி­யும் கூட்­டத்­தைக் கலைக்க முயன்­ற­னர்.

இந்த வன்­மு­றை­யின்­போது நால்­வர் பலி­யா­கி­னர்; ஐம்­ப­துக்­கும் மேற்­பட்ட போலிஸ் அதி­கா­ரி­கள் காய­ம­டைந்­த­னர். இந்­நி­லை­யில், காய­ம­டைந்த அதி­கா­ரி­களில் ஒரு­வரான பிரை­யன் சிக்­னிக் என்­ப­வர் சிகிச்சை பல­னின்றி இறந்­து­விட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

நாடா­ளு­மன்ற வளா­கத்­தில் நிகழ்ந்த வன்­மு­றை­யை அடுத்து, கல்­வி­ய­மைச்­சர், போக்கு­வ­ரத்து அமைச்­சர் எனப் பல­ரும் தங்களது பத­வி­யி­ருந்து வில­கு­வ­தாக அறி­வித்­துள்­ள­னர்.

அதே­போல, வன்­மு­றை­யைக் கட்­டுப்­ப­டுத்த தவ­றி­ய­தற்­குப் பொறுப்­பேற்று நாடா­ளு­மன்ற போலிஸ் படை­யின் தலை­வர் ஸ்டீவன் சண்­டும் பதவி வில­கல் கடி­தம் கொடுத்­துள்­ள­தா­கத் தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன.

இத­னி­டையே, அதி­பர் டிரம்ப்­பின் முடக்கப்பட்ட டுவிட்­டர் பக்­கம் 12 மணி நேரத்­திற்­குப் பின் செயல் பாட்டிற்கு வந்தது. அதைத் தொடர்ந்து காணொ­ளிப் பதிவு ஒன்றை வெளி­யிட்ட அதி­பர் டிரம்ப், "இம்­மா­தம் 20ஆம் தேதி புதிய நிர்­வா­கம் ஆட்­சிப் பொறுப்பை ஏற்­கும். இப்­போது என் கவ­ன­மெல்­லாம் அந்த அதி­கார மாற்­றம் சுமு­க­மாக நடை­பெற வேண்­டும் என்­ப­தில்­தான். ஆற்­றுப்­ப­டுத்­து­வ­தற்­கும் இணக்­கத்­திற்­கு­மான தரு­ணம் இது," எனக் கூறி­யுள்­ளார்.