விரிவுபடுத்தப்பட்ட கால முறைப் பயண ஏற்பாட்டுத் திட்டத்தின்கீழ் (பிசிஏ), நிரந்தரவாசத் தகுதிபெற்று சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்கள் குறுகியகால விடுமுறைக்கு ஊர் திரும்ப நாளை மறுநாள் முதல் விண்ணப்பிக்கலாம்.
குறைந்தது 90 நாள்களுக்கு வேலை செய்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி பெறுவர்.
சிங்கப்பூரிலுள்ள மலேசியத் தூதரகம் தனது ஃபேஸ்புக் பக்கம் வழியாக இதனைத் தெரிவித்துள்ளது.
ஊருக்குச் சென்றுவிட்டு சிங்கப்பூர் திரும்பிய பிறகு, கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ளுமுன், பிரத்தியேக இடங்களில் அவர்கள் 14 நாள்கள் தங்கியிருக்க வேண்டியது அவசியம்.
காலமுறைப் பயண ஏற்பாட்டின்கீழ் கடற்பாலம், துவாஸ் செகண்ட் லிங்க் வழியாக மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

