பாரிஸ்: பறவைக் காய்ச்சல் காரணமாக ஐரோப்பாவில் 3.5 மில்லியனுக்கும் மேற்பட்ட பறவைகள் மாண்டுவிட்டன. இவற்றில் விவசாயிகள் தங்கள் பண்ணைகளில் வளர்த்து வந்த பல வாத்துகளும் அடங்கும்.
கடந்த நான்கு ஆண்டுகளில் இதுவே பறவைக் காய்ச்சலால் ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள ஆக மோசமான பாதிப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாடுகளில் புதிய வகை பறவைக் காய்ச்சல் கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக கிருமி மேற்கொண்டு பரவாமல் இருக்க பண்ணைகளில் வளர்க்கப்படும் அனைத்துப் பறவைகளையும் அழிக்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக பாரிசில் இயங்கும் உலக விலங்கு சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.