மலேசியாவில் மற்றோர் அமைச்சருக்குக் கிருமித்தொற்று

மலேசியாவில் மற்றோர் அமைச்சருக்குக் கிருமித்தொற்று

1 mins read
25a63ad9-e922-4ada-b88c-2d5fad8221cf
-

மலேசியாவின் பொருளியல் விவகார அமைச்சர் முஸ்தபா முகமதிற்கு கொரோனா கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கிளந்தானிலுள்ள பொது மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ள அவரது உடல்நிலை சீராக இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

பிரதமர் முகைதீன் யாசினின் ப்ரிபூமி பெர்சாத்து கட்சியின் உறுப்பினரான இவர் முன்னாள் வர்த்தக அமைச்சராகவும் இருந்திருக்கிறார். முன்னதாக இவருக்கு கொவிட்-19 சோதனை செய்யப்பட்டபோது அரக்கு கிருமித்தொற்று இல்லை என சோதனையின் முடிவு குறிப்பிட்டது.

திரு முகைதீன் யாசினின் அமைச்சரவையில் கொவிட்-19 தொற்றிய இரண்டாவது உறுப்பினராக அவர் உள்ளார். கடந்தாண்டு அக்டோபரின்போது சமய விவகார அமைச்சர் ஸுல்கிஃப்லி முகம்மது அக் பக்காரிக்கு இக்கிருமித் தொற்று ஏற்பட்டது.