இந்தோனீசிய நிலச்சரிவு; 11 பேர் பலி

இந்தோனீசிய நிலச்சரிவு; 11 பேர் பலி

1 mins read
8b9e04f6-d43c-442f-95e1-54cc1b4d8c92
-

மேற்கு இந்தோனீசியாவில் ஏற்பட்ட இரண்டு நிலச்சரிவுகளில் குறைந்தது 11 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் 18 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். மேற்கு ஜாவாவிலுள்ள ஹன்ஜுவாங் நகரில் (ஜகார்த்தாவிலிருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது) இந்த நிலச்சரிவுகள் நேற்று பிற்பகல் 4 மணிக்கு நேர்ந்ததாக இந்தோனீசியாவின் பேரிடர் நிர்வாகத்திற்கான தேசிய வாரியம் தெரிவித்தது.

"அதிகமான மழைப்பொழிவும் நிலைத்தன்மையற்ற மணலும் முதல் நிலச்சரிவுக்கு வித்திட்டது. புதையுண்டவர்களை மீட்பதிலும் பொதுமக்களை வெளியேற்றுவதிலும் அதிகாரிகள் பணியாற்றிக்கொண்டிருந்தபோது இரண்டாவது நிலச்சரிவு ஏற்பட்டது," என்று வாரியத்தின் தலைவர் ரடிட்யா ஜாடி தெரிவித்தார்.

17,000க்கும் அதிகமான தீவுகளைக் கொண்ட இந்தோனீசா, அண்மைய சில நாட்களால் பருவமழையாலும் உயரமாக ஓங்கி வீசும் கடல் அலைகளாலும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பல மில்லியன் கணக்கான மக்கள் மலைப்பகுதிகளிலும் ஆற்றுப்பகுதிகளுக்கு அருகிலும் வசிக்கின்றனர்.