எதிர்த்திசையில் வாகனம் ஓட்டிய பெண்ணிடம் போலிசார் விசாரணை

எதிர்த்திசையில் வாகனம் ஓட்டிய பெண்ணிடம் போலிசார் விசாரணை

1 mins read
8098a68b-59cb-4fbe-ad09-9602fbc334ef
-

ஜோகூர் பாரு: நெடுஞ்சாலையில் எதிர்த்திசையில் வாகனம் ஓட்டிய பெண்ணை மலேசிய போலிசார் கைது செய்து உள்ளனர். வியாழக்கிழமை மாலை 4:30 மணியளவில் ஜோகூரில் கஹாயா பாரு சுங்கச்சாவடிக்கு அருகிலுள்ள செனாய்-தேசாரு அதிவேக நெடுஞ்சாலையில் நடந்த இச்சம்பவம் எதிரே சென்ற கார் ஒன்றின் கேமராவில் பதிவாகிஉள்ளதாக போலிசார் தெரிவித்தனர். சமூக ஊடகங்களில் இந்த காணொளி பரவியதையடுத்து, தாமாகவே முன்வந்து காவல்நிலையத்திற்குச் சென்ற அப்பெண்ணை போலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.