சினோவெக் தடுப்பூசிக்கு இந்தோனீசியா ஒப்புதல்

ஜகார்த்தா: சீனா­வின் சினோ­வெக் பயோ­டெக் நிறு­வ­னம் தயா­ரித்­துள்ள கொவிட்-19 தடுப்­பூசியின் அவ­ச­ர­கா­லப் பயன்­பாட்­டிற்கு இந்­தோ­னீ­சிய உணவு, மருந்­துக் கண்­கா­ணிப்பு அமைப்பு ஒப்­பு­தல் அளித்­துள்­ளது. நோய்த்­தொற்­றால் தென்­கிழக்­கா­சி­யா­வி­லேயே ஆக மோச­மா­கப் பாதிக்­கப்­பட்­டுள்ள இந்­தோ­னீ­சியா, அதன் 34 மாநி­லங்­க­ளி­லும் நாளை மறு­தி­னம் முதல் தடுப்­பூ­சித் திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த இந்த ஒப்­பு­தல் வழி­வி­டு­கிறது.

மேற்கு ஜாவா மாநி­லத் தலை­ந­கர் பண்­டோங்­கில் நடத்­தப்­பட்ட முதற்­கட்ட மருத்­து­வப் பரி­சோ­த­னை­யில், சினோ­வெக் தடுப்­பூ­சிக்கு 65.3 விழுக்­காடு செயல்­தி­றன் இருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

இந்­தோ­னீ­சியா இது­வரை மூன்று மில்­லி­யன் சினோ­வெக் தடுப்­பூ­சி­களைப் பெற்­றுக்­கொண்­டுள்­ளது. இந்த வாரம் கூடு­த­லாக 15 மில்­லி­யன் தடுப்­பூ­சி­களை அது பெற­வி­ருக்­கிறது.

ஃபைசர்-பயோ­என்­டெக், ஆஸ்ட்­ர­செ­னிகா தடுப்­பூ­சி­க­ளை­யும் அந்­நாடு பின்­னர் பெற­விருக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!