மலேசியாவில் மேலும் ஓர் அமைச்சருக்குத் தொற்று

மலேசியாவில் மேலும் ஓர் அமைச்சருக்குத் தொற்று

2 mins read
073686db-5f36-4326-92b4-049405d331e1
அமைச்சர் ரீனா முகம்மது ஹருன். படம்: தி ஸ்டார் -

மலே­சிய மக­ளிர், குடும்ப, சமூக மேம்­பாட்டு அமைச்­சர் ரீனா முகம்­மது ஹரு­னுக்கு கொவிட்-19 நோய்த்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. அதைத் தொடர்ந்து இவர் நேற்று மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டார்.

நேற்று முன்­தி­னம் இவ­ருக்கு நோய்த்­தொற்­றுப் பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்­டது. அதே நாள் இரவு இவ­ருக்­குத் தொற்று உறுதி­யா­ன­தாக இவ­ரது அலு­வ­ல­கம் தெரி­வித்­தது.

"இச்­சம்­ப­வம் எவ­ருக்­கும் அசௌ­க­ரி­யத்­தை­யும் பதற்­றத்­தை­யும் ஏற்­ப­டுத்தி இருந்­தால் அதற்­காக அமைச்­சர் மன்­னிப்­புக் கோரு­கி­றார்," என்று இவ­ரது அலு­வ­ல­கம் கூறி­யது.

அமைச்­சர் ரீனா பணி­யில் இல்­லாத இந்­தச் சம­யத்­தில் இவ­ரது அமைச்சு வழக்­கம்­போல பணி­யைத் தொட­ரும் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

இதற்­கி­டையே, கடந்த சனிக்­கி­ழமை தமக்கு நோய்த்­தொற்று உறு­தி­யா­ன­தாக பிர­த­மர் அலு­வ­லக அமைச்­சர் முஸ்­தபா முகம்­மது நேற்று முன்­தி­னம் தெரி­வித்து இருந்­தார்.

அவ­ருக்­குத் தொற்று உறு­தி­யா­ன­தைத் தொடர்ந்து முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக குறைந்­தது இரு அமைச்­சர்­கள் தங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­திக்கொண்­டுள்­ள­னர்.

கொவிட்-19 தொற்று உறு­தி­யான மூன்­றா­வது அமைச்­சர் திரு­மதி ரீனா. கடந்த ஆண்டு அக்­டோ­பரில் சமய விவ­கார அமைச்­சர் ஸுல்­கி­ஃப்லி முகம்­மது அல் பக்ரிக்கு நோய்த்தொற்று உறு­தி­யா­னது.

இந்­நி­லை­யில், மலேசிய அமைச்­ச­ர­வை­யைச் சேர்ந்த அனைத்து அமைச்­சர்­க­ளும் கொவிட்-19 பரி­சோ­தனையை மேற்­கொள்­ளும்­படி கேட்டுக்­கொள்­ளப்­பட்டு உள்­ள­னர். அமைச்­சர்­கள் முஸ்­தபா முகம்­மது, ரீனா இரு­வ­ருக்­கும் தொற்று உறு­தி­யா­ன­தைத் தொடர்ந்து இந்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்­சர் ஆதம் பாபா கூறி­யுள்­ளார். அதோடு தொற்­றின் அபா­யம் குறித்து அமைச்­சின் மதிப்­பீட்­டின் அடிப்­ப­டை­யில் அமைச்­சர்­கள் தனித்­தி­ருக்க வேண்­டுமா என்­பது குறித்து முடிவு செய்­யப்­படும். புத்ரா ஜெயா மாவட்ட சுகா­தார அலு­வலகம், அமைச்­சர்­க­ளின் உடல் நிலையை மதிப்­பீடு செய்­யும் என்­றும் டாக்­டர் ஆதம் பாபா தெரி­வித்­தார்.