சுடச் சுடச் செய்திகள்

‘வாட்ஸ்அப்’பில் இருந்து டெலிகிராம், சிக்னலுக்கு மாறும் பயனாளர்கள்

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலி சமீபத்தில் அதன் பயன்பாட்டு விதிமுறைகளையும் தனியுரிமை கொள்கையையும் புதுப்பித்து வருகிறது.
புதிய விதிமுறைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தொடர்ந்து வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியும் என்று கூறி வருகிறது.

அடுத்த மாதம் 8ஆம் தேதிக்குள் புதிய நிபந்தனைக்கு இணக்கம் தெரிவித்தால் மட்டுமே தனது தகவல் அனுப்பும், பெறும் சேவையைத் தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்று வாட்ஸ்அப் அண்மையில் தெரிவித்தது. 

இதற்குப் பலர் கண்டனம் தெரிவித்தனர். புதிய நிபந்தனையால் தகவல்களின் ரகசியத்தன்மைக்கு எவ்வித பங்கமும் ஏற்படாது என்று வா்டஸ்அப் உறுதி அளித்தும் பலர் டெலிகிராம், சிக்னல் ஆகிய தகவல் அனுப்பும் சேவைக்கு மாறி வருகின்றனர்.

இதனிடையே 40 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்ட டெஸ்லா நிறுவனம் உரிமையாளர் எலான் மஸ்க், வாட்ஸ்அப்புக்கு மாற்றாக ‘சிக்னல்’ செயலியை பயன்படுத்துமாறு கோரினார். இதையடுத்து சிக்னல் செயலி பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் சிக்னல் செயலி 3.9 மில்லியன் பயனர்களையும் டெலிகிராம் செயலி 150 மில்லியன் பயனர்களையும் வாட்ஸ்அப் செயலி 140 மில்லியன் பயனர்களையும் கொண்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon