கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு அமெரிக்க மருத்துவர் மரணம்; விசாரணை

கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு அமெரிக்க மருத்துவர் மரணம்; விசாரணை

1 mins read

மயாமி: அமெ­ரிக்­கா­வின் ஃபுளோரிடா மாநி­லத்­தைச் சேர்ந்த மருத்­து­வர் ஒரு­வர், 'ஃபைசர்-பயோ­என்­டெக்' தடுப்­பூ­சியை போட்­டுக்­கொண்டு 16 நாட்­கள் கழித்து அவர் உயி­ரி­ழந்த சம்­ப­வம் குறித்து சுகா­தா­ரத் துறை அதி­கா­ரி­கள் விசா­ரணை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

டாக்­டர் கிரெ­கரி மைக்­கல் எனும் அந்த 56 வயது மகப்­பேறு, மக­ளிர்­நல மருத்­து­வர், கடந்த மாதம் 18ஆம் தேதி கொவிட்-19 தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­டார். பதி­னாறு நாட்­கள் கழித்து மூளை­யில் ரத்­தக் கசிவு ஏற்­பட்­டதைத் தொடர்ந்து அவர் உயி­ர் இழந்து­விட்­ட­தாக அவ­ரது மனைவி ஃபேஸ்புக் பதி­வில் குறிப்­பிட்­டார்.

இது­கு­றித்து தான் தீவி­ர­மாக விசா­ரணை நடத்தி வரு­வ­தாக 'ஃபைசர்' நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

எனி­னும், தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தற்­கும் அந்த மருத்­து­வ­ரின் மர­ணத்­திற்­கும் இடையே நேர­டித் தொடர்பு இருப்­ப­தாக இப்­போ­தைக்­குத் தெரி­ய­வில்லை என்று அது கூறி­யது.

மனி­தர்­க­ளி­டம் தடுப்­பூ­சி­யைச் செலுத்­திப் பார்க்­கும் பரி­சோ­தனைக் கட்­டத்­தில் இது­போன்ற பாது­காப்­புப் பிரச்­சி­னை­கள் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை என்று அந்­நி­று­வனம் விவ­ரித்­தது.

அமெ­ரிக்­கா­வில் இது­வரை 'ஃபைசர்-பயோ­என்­டெக்' அல்­லது 'மொடர்னா' தடுப்­பூ­சி­களை ஏறத்­தாழ ஒன்­பது மில்­லி­யன் பேர் போட்டுக்­கொண்­ட­னர். அந்­நாட்­டில் இது­வரை இவ்­விரு தடுப்­பூ­சி­களுக்கு மட்­டுமே ஒப்­பு­தல் அளிக்­கப்­பட்­டுள்­ளது.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட வேறு எவ­ரும் உயி­ர் இழந்து­விட்­ட­தாக இது­வரை தக­வல் இல்லை.

கைவலி, சோர்வு, தலை­வலி அல்­லது காய்ச்­சல் போன்ற சாதா­ரண பக்­க­வி­ளை­வு­கள் மட்­டும் பல­ருக்கு ஏற்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்­தப் பக்­க­வி­ளை­வு­கள் தற்­கா­லி­க­மா­னவை என்­றும் தெரி­விக்­கப்­ப­டு­கிறது.