சீனாவில் 10 மாதங்களுக்குப் பிறகு ஆக அதிக தொற்று எண்ணிக்கை

சீனாவில் 10 மாதங்களுக்குப் பிறகு ஆக அதிக தொற்று எண்ணிக்கை

1 mins read

பெய்­ஜிங்: சீனா­வில் 10 மாதங்­களுக்­குப் பிறகு ஒரே நாளில் ஆக அதி­க­மான கொவிட்-19 நோய்த்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன.

நேற்று முன்­தி­னம் 138 பேருக்­குத் தொற்று உறு­தி­யா­ன­தாக அந்நாட்டு தேசிய சுகா­தார ஆணை­யம் தெரி­வித்­தது. அதற்கு முந்­தைய நாள் பதி­வாகி இருந்த 115 சம்­ப­வங்­க­ளை­விட இந்த எண்­ணிக்கை அதி­கம்.

புதிய தொற்­றுச் சம்­ப­வங்­களில் 124 பேருக்கு உள்­ளூ­ரில் தொற்று உறு­தி­யா­ன­தாக ஆணை­யம் கூறி­யது. அவர்­களில் 81 பேருக்கு தலை­ந­கர் பெய்­ஜிங் அருகே உள்ள ஹெபெய் மாநி­லத்­தி­லும் 43 பேருக்கு வட­கி­ழக்கு ஹெய்­லோங்­ஜி­யாங் மாநி­லத்­தி­லும் தொற்று உறு­தி­யா­னது.

நோய்த்­தொற்­றுக்கு ஒரு­வர் உயி­ரி­ழந்­து­விட்­ட­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த ஆண்டு மே மாதத்­திற்குப் பிறகு உயி­ரி­ழப்பு பதி­வாகி இருப்­பது இதுவே முதன்­முறை. சீனா­வில் கடந்த ஆண்டு தொடக்­கத்­தில் பெருந்­தொற்று நில­வ­ரத்­து­டன் ஒப்­பு­நோக்க, அண்­மைய நாட்­களில் கொவிட்-19 சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை குறைவு என்­றா­லும், நோய்ப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் வித­மாக இம்­மா­தம் 28 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மானோரை வீட்­டில் தனி­மைப்­படுத்தும் உத்­த­ரவை சீனா பிறப்­பித்­துள்­ளது.

அடுத்த மாத நடுப்­ப­கு­தி­யில் சீனப் புத்­தாண்டு கொண்­டா­டப்­பட இருக்­கும் சம­யத்­தில் புதிய நோய்த்­தொற்று அலை எழுந்­துள்­ளது.

சீனப் புத்­தாண்டு விடு­மு­றையை முன்­னிட்டு மில்­லி­யன் கணக்­கா­னோர் அவ­ர­வர் சொந்த ஊர்­களுக்­குத் திரும்­பு­வது வழக்கம்.

எனி­னும், விடு­முறை காலத்­தில் தேவை­யில்­லாத பய­ணங்­க­ளைத் தவிர்த்­துக்­கொள்­ளு­மாறு ஹெய்­லோங்­ஜி­யாங் மாநில சுகா­தா­ரத் துறை 37.5 மில்­லி­யன் பேரைக் கேட்­டுக்­கொண்­டுள்­ளது.