விமான விபத்து: பழைய விமானங்களைப் பரிசோதிக்க இந்தோனீசிய அரசு உத்தரவு

விமான விபத்து: பழைய விமானங்களைப் பரிசோதிக்க இந்தோனீசிய அரசு உத்தரவு

1 mins read

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வில் இம்­மா­தம் 9ஆம் தேதி ஸ்ரீவி­ஜயா விமா­னம் ஜாவா கட­லில் விழுந்து நொறுங்­கி­ய­தைத் தொடர்ந்து, போயிங் 737 ரக பழைய விமா­னங்­க­ளைப் பரி­சோ­திக்­கு­மாறு அந்நாட்டு விமான நிறு­வ­னங்­களுக்கு போக்­கு­வ­ரத்து அமைச்சு உத்­த­ர­விட்­டுள்­ளது.

"முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக இந்­தப் பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­ப­டு­கிறது. மற்ற நாடு­களில் இந்த நடை­முறை வழக்­க­மா­கக் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கிறது," என்று அமைச்­சின் பேச்­சா­ளர் அடித்தா இரா­வாத்தி கூறி­னார்.

தலை­ந­கர் ஜகார்த்­தா­வில் இருந்து புறப்­பட்ட சிறிது நேரத்­தில் 10,000 அடி உய­ரத்­தில் இருந்து அந்த விமா­னம் கட­லில் விழுந்­தது.

இந்த விபத்­துக்­கான கார­ணம் இன்­ன­மும் தெரி­ய­வில்லை. கிட்­டத்­தட்ட 27 ஆண்­டு­கள் பழ­மை­யான அந்த விமா­னத்­தில் 62 பேர் பய­ணம் செய்­த­னர்.

விமா­னச் சிதை­வு­க­ளை­யும் உடல் பாகங்­க­ளை­யும் மீட்­புப் பணி­யா­ளர்­கள் கரைக்கு கொண்­டு­வந்து சேர்த்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில், விமா­னத்­தின் இரண்­டா­வது குரல் பதி­வுப் பெட்டி­யைத் தேடும் பணி விரி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

மோச­மான வானிலை கார­ண­மாக குரல் பதி­வுப் பெட்­டி­யைத் தேடும் பணியை முக்­கு­ளிப்­பா­ளர்­கள் நேற்று முன்­தி­னம் தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­ய­தாக தேசிய தேடி மீட்­கும் குழு குறிப்­பிட்­டி­ருந்­தது.

அந்த விமா­னம் கடந்த மாதம் 20ஆம் தேதி­தான் சேவைக்­குத் திரும்­பி­யது. கொவிட்-19 சூழல் கார­ண­மாக விமா­னப் பய­ணங்­கள் ரத்து செய்­யப்­பட்ட நிலை­யில், கடந்த ஒன்­பது மாதங்­க­ளாக அந்த விமா­னம் தரை­யில் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்­தது.