மலேசியா: புதிய உச்சமாக ஒரே நாளில் 4,000 பேருக்கு மேல் கிருமித்தொற்று

மலேசியா: புதிய உச்சமாக ஒரே நாளில் 4,000 பேருக்கு மேல் கிருமித்தொற்று

1 mins read
64c6e1a4-98fa-471d-b187-b59a5fac95ea
மலேசியாவில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 4,029 பேருக்கு மேல் கொவிட்-19 தொற்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. படம்: இபிஏ -

மலேசியாவில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 4,029 பேருக்கு மேல் கொவிட்-19 தொற்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. அங்கு ஒரே நாளில் 4,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டது இதுவே முதல் முறை. இம்மாதம் 14ஆம் தேதி 3,337 சம்பவங்கள் பதிவானதே முந்தைய உச்சமாக இருந்தது.

நேற்று உறுதிசெய்யப்பட்ட 4,029 தொற்றுச் சம்பவங்களில் எட்டுப் பேர் மட்டுமே வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். இதையடுத்து, மொத்த பாதிப்பு 155,095 ஆனது.

கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரில் மேலும் 2,148 பேர் குண­ம­டைந்து, மருத்­து­வ­ம­னை­யில் இருந்து வீடு திரும்­பி­விட்­ட­னர். இதையடுத்து, தொற்றிலிருந்து மீண்டோர் எண்ணிக்கை 117,375 ஆக அதிகரித்தது.

"இப்­போ­தைக்கு 205 நோயா­ளி­கள் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்; 79 பேருக்குச் செயற்கைச் சுவாச உதவி தேவைப்படுகிறது," என்று மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் எட்­டுப் பேர் மர­ணம் அடைந்­ததை அடுத்து, மலே­சி­யா­வில் கொரோனா மர­ணங்­க­ளின் எண்­ணிக்கை 594ஆக உயர்ந்தது.