தெற்கு பிலிப்பீன்சில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் விமானப் படை கர்னல் உட்பட ஏழு அதிகாரிகள் மாண்டனர்.
புக்கிட்னான் மாநிலத்தின் மலைப்பிரதேசமான பான்டரோனில் கம்யூனிச போராளிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த ஹூயே என்றழைக்கப்படும் புதுப்பிக்கப்பட்ட வியட்னாம்-கால ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு ராணுவம் கூறியது.
எம்பாசுக்-ஓங்கின் மலைப்பகுதிக்கு மேல் பறந்துகொண்டிருந்தபோது ஹெலிகாப்டரில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து, ஹெலிகாப்டரை அவசரமாகத் தரையிறக்க முயன்றபோது, அது விபத்துக்குள்ளானதாகத் தகவல்கள் கூறுகின்றன.
சம்பவ இடத்திற்கு மீட்புப் படையினர் விரைந்தபோது, அங்கு யாரும் உயிர் பிழைத்திருக்கவில்லை என்றும் ராணுவச் செய்திகள் தெரிவிக்கின்றன.


