நார்வேயில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 29 முதியவர்கள் மரணம்

நார்வேயில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 29 முதியவர்கள் மரணம்

1 mins read
2d2b185e-4664-4409-ac0c-9296c2d138fb
படம்: ராய்ட்டர்ஸ் -

நார்வேயில் கொரோனா தடுப்பூசியின் முதல் 'டோஸ்' ஊசி போட்டுக்கொண்டவர்களில் 75 வயதுக்கு மேற்பட்ட 29 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் அங்கு 23 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின. அண்மையில் 6 பேர் உயிரிழந்ததையடுத்து எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை வரை நார்வேயில் ஃபைசர் - பயோஎன்டெக் தடுப்பூசிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, தடுப்பூசி போடுவதில் முதியவர்களுக்கு முதலில் போடுவதா அல்லது வேறு வயது குழுக்களுக்கு முதலில் தடுப்பூசி போட்டு நோய்த் தடுப்பை அதிகரிப்பதா என்பது பற்றிய விவாதங்கள் எழுந்துள்ளன.

இந்த 29 பேரில் 13 பேரின் மரணம் பற்றி ஆய்வு செய்திருப்பதாகவும் மேலும் 16 பேரின் இறப்பு பற்றி தெரியும் எனவும் நார்வேகியன் மெடிசின்ஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.

ஆனால், தடுப்பூசிக்கும் அவர்களது மரணத்துக்கும் தொடர்பு இருப்பதற்கான சாத்தியம் குறைவு என அதிகாரிகள் கருதுகின்றனர்.

ஆனால், மரணத்துக்கு முன்பு அவர்கள் அனைவரும் கடுமையாக நோய்வாய்ப்படத்தாகக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்