மலேசியா: உதவிக்கு முன்வரும் தனியார் மருத்துவமனைகள்

மலே­சி­யா­வில் பதி­வா­கும் கிரு­மித்­தொற்று எண்­ணிக்கை அண்மை நாட்­க­ளாக மூவா­யி­ரம், நாலா­யி­ரம் என்று ஏறிக்­கொண்டே செல்­வ­தால் நிலை­மையைக் கட்­டுக்­குள் கொண்டுவர அர­சாங்­கம் பெரு­மு­யற்­சி­களை எடுத்து வரு­கிறது.

கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­ப­டு­வோ­ருக்­குச் சிகிச்சை அளிக்க பொது மருத்­து­வ­ம­னை­களில் படுக்­கை­க­ளுக்­குப் பற்­றாக்­குறை ஏற்­பட்டு வரு­கிறது. இந்த இக்­கட்­டான நிலை­யில் அர­சாங்­கத்­து­டன் இணைந்து பணி­யாற்ற தனி­யார் மருத்­து­வ­ம­னை­கள் முன்­வந்து உள்­ளன. கொவிட்-19 நோயா­ளி­க­ளைக் கையாள்­வ­தற்­கான ஏற்­பா­டு­களில் அவை தீவி­ர­மாக ஈடு­பட்டு வரு­கின்­றன. மருத்­து­வ­ம­னை­க­ளின் பொது வார்­டு­க­ளி­லும் தீவிர சிகிச்­சைப் பிரி­வி­லும் உள்ள படுக்­கை­க­ளின் எண்­ணிக்­கையை மலே­சிய தனி­யார் மருத்­து­வ­ம­னைச் சங்­கம் கணக்­கெ­டுத்து வரு­வ­தாக தக­வல் ஒன்று தெரி­வித்தது.

பொது வார்­டும் தீவிர சிகிச்­சைப் பிரி­வும் கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்கு சிகிச்சை அளிக்­கப் பயன்­ப­டுத்­தப்­ப­ட­லாம். தனி­யார் மருத்­து­வ­ம­னை­கள் அனைத்­தி­லும் உள்ள மொத்த படுக்­கை­களில் குறைந்­த­பட்­சம் பத்து விழுக்­கா­டா­வது கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்கு ஒதுக்கி வைப்­ப­தற்­கான ஏற்­பா­டு­களில் சங்­கம் ஈடு­பட்டு வரு­கிறது. தற்­போ­தைய நில­வ­ரப்­படி நாடு முழு­வ­தும் கண்­ட­றி­யப்­படும் கொவிட்-19 நோயா­ளி­கள் அர­சாங்க மருத்­து­வ­ம­னை­க­ளி­லேயே அனு­ம­திக்­கப்­பட்டு வரு­கி­றார்­கள்.

நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை பெரு­கி­வ­ரு­வ­தால் அந்த மருத்­து­வ­ம­னை­களில் போது­மான படுக்­கை­கள் இல்லை. கோலா­லம்­பூர் மருத்­து­வம­னை­யி­லும் மலே­சிய பல்­க­லைக்­க­ழக மருத்­துவ நிலை­யத்­தி­லும் கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்­கான தீவிர சிகிச்­சைப் பிரிவில் படுக்­கை­கள் 100 விழுக்­காடு நிரம்­பி­விட்­ட­தாக அண்­மை­யில் மலே­சிய மாமன்­ன­ரின் அரண்­மனை அறிக்கை தெரி­வித்­தது.

பேராக், சிலாங்­கூர், மலாக்கா, திரெங்­கானு, சர­வாக் போன்ற மாநி­லங்­க­ளின் மருத்­து­வ­ம­னை­க­ளி­ல் 70 விழுக்­காட்­டுக்கும் மேலான தீவிர சிகிச்­சைப் பிரிவு படுக்­கை­கள் நிரம்­பி­விட்­ட­தா­க­வும் அப்­போது குறிப்­பி­டப்­பட்­டது.

இப்­ப­டிப்­பட்ட நிலை­யில், தனி­யார் மருத்­து­வ­ம­னை­க­ளின் பங்கு அத்­தி­யாவசியமாகிறது. உத­விக்கு முன்­வர மலே­சிய தனி­யார் மருத்­து­வ­மனை சங்­கம் கொள்கை அள­வில் ஒப்­புக்­கொண்டுள்­ள­தாக சுகா­தார துணை அமைச்­சர் நூர் அஸ்மி அண்­மை­யில் தெரி­வித்­தி­ருந்­தார். தொற்று நோயா­ளி­க­ளுக்­கான சிகிச்சை அர­சாங்க மருத்­து­வ­ம­னை­களில் செய்­யப்­பட வேண்­டும் என சுகா­தார அமைச்சு கூறி­யி­ருந்­தா­லும் சிகிச்சை வழங்க முன்­வ­ரும் எந்­த­வொரு தனி­யார் சுகா­தார மையத்­தை­யும் அது நிறுத்­த­வில்லை என்று அவர் கூறி­யி­ருந்­தார். இது தொடர்­பாக மலே­சிய தனி­யார் மருத்­து­வ­மனை சங்­கத்­தின் தலை­வர் டாக்­டர் குல்­ஜித் சிங் விளக்­கம் அளித்­துள்­ளார். கொவிட்-19 நோயா­ளி­

க­ளுக்கு தனி­யார் மருத்­து­வ­ம­னை­கள் ஏற்­கெ­னவே சிகிச்சை அளித்து வந்­தா­லும் அரசு மருத்­து­வ­ம­னை­களில் படுக்­கை­கள் தயா­ரா­ன­தும் அவற்­றுக்கு அனுப்­பப்­பட்டு வந்­த­னர் என்­றார் அவர்.அத­னைத் தொடர்ந்து தற்­போது தனி­யார் மருத்­து­வ­மனை ஒவ்­வொன்­றும் எத்­தனை நோயா­ளி­களை ஏற்­க­லாம் என்­பது பற்­றி­யும் நோய்த்­தன்மை 5 வரை­யி­லா­ன­வற்­றில் எது­வரை அம்­ம­ருத்­து­வ­ம­னை­கள் சிகிச்சை அளிக்­க­லாம் என்­பது பற்­றி­யும் அர­சாங்­கத்­து­டன் கலந்துபேசி முடிவெடுக்க சங்­கம் தயா­ராக இருப்­ப­தா­க­வும் அவர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!