பைடன் நிர்வாகத்தில் 13 பெண்கள் உள்ளிட்ட 20 இந்தியர்கள்

பைடன் நிர்வாகத்தில் 13 பெண்கள் உள்ளிட்ட 20 இந்தியர்கள்

1 mins read
370dbdaf-c374-4224-b982-c36ec0249128
-

ஜோ பைடன் அமெ­ரிக்க அதி­ப­ரா­கப் பதவி ஏற்க நூறு மணி நேரத்­திற்­கும் குறை­வான காலமே இருக்­கும் நிலை­யில் இந்­திய அமெ­ரிக்­கர்­கள் பலரை தமது நிர்­வா­கத்­தில் அவர் நிய­மிக்க இருப்­ப­தாக தக­வல் ஒன்று வெளி­யாகி உள்­ளது.குறைந்­த­பட்­சம் 20 இந்­தி­யர்­களை அவர் நிய­மிப்­பார் அல்­லது பெயர் குறிப்­பி­டு­வார் என்­றும் அவர்­களில் 13 பேர் பெண்­கள் என்­றும் இந்­தி­யா­வின் பிடிஐ செய்தி நிறு­வ­னம் கூறியது. இவர்­கள் அனை வரும் திரு பைடன் நிர்­வா­கத்­தில் முக்­கிய பொறுப்­பு­களில் அமர்த்­தப்­பட இருப்­ப­தா­க­வும் குறிப்­பாக, அதி­கா­ரம் நிறைந்த வெள்ளை மாளிகை வளா­கத்­தில் 17 இந்­தி­யர்­கள் நிய­மிக்­கப்­ப­டு­வார்­கள் என வும் அச்­செய்தி தெரி­விக்­கிறது.