பெருமளவில் போதைப்பொருள் பறிமுதல்

ஜோகூர் பாரு: மலே­சி­யா­வில் போதைப்­பொ­ருள் குற்­றப்புல­னாய்­வுத் துறை இம்­மா­தம் ஆகப்­பெ­ரிய அள­வில் போதைப் பொருட்­க­ளைப் பறி­மு­தல் செய்­துள்­ளது. இம்­மா­தம் 14, 15ஆம் தேதி­களில் நடத்­தப்­பட்ட மூன்று சோத­னை­களில் சுமார் 201 மில்­லி­யன் ரிங்­கிட் மதிப்­பு­டைய போதைப் பொருட்­களை ஜோகூர் போலி­சார் பறி­மு­தல் செய்­த­னர்.

ஜன­வரி 12ஆம் தேதி பிடி­பட்ட 14 சந்­தேக நபர்களி­டம் நடத்­தப்­பட்ட விசா­ர­ணை­யின் அடிப்­ப­டை­யில் இந்த நட­வ­டிக்கை மேற் கொள்­ளப்­பட்­ட­தாக ஜோகூர் போலிஸ் துறைத் தலை­வர் அயோப் கான் மிடின் பிட்சே தெரி­வித்­தார்.

அதி­ரடி சோத­னை­க­ளின் போது 3.2 டன் எக்ஸ்­டஸி தூளும், 26.1 கிலோ எக்ஸ்­டஸி திர­வ­மும் 117 கிலோ எர்­மின் 5 தூளும் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

இது சுமார் 11 மில்­லி­யன் போதைப் புழங்­கி­கள் பயன் படுத்­தக்­கூ­டிய அளவு என்று கணக்­கி­டப்­பட்­டுள்­ளது. இத­னி­டையே, எக்­வ­டார் நாட்­டி­லி­ருந்து எஸ்­தோ­னியாவிற்கு கடத்­தப்­ப­ட­வி­ருந்த1.3 டன் போதைப்­பொ­ருள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!