ஜோ பைடனின் பதவியேற்பைக் கொண்டாடும் கோலங்கள்

ஜோ பைடனின் பதவியேற்பைக் கொண்டாடும் கோலங்கள்

1 mins read
d2b66728-c56c-4749-b3a3-ba63b495ef67
-

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனும் துணையதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிசும் பதவியேற்பு விழாவில் கோலங்கள் இடம்பெறவுள்ளன.இவர்களின் பதவிப்பிரமாண விழா இரண்டு நாட்களில் (ஜனவரி 20ஆம் தேதி) நடக்கவுள்ளது.

கமலா ஹாரிசின் மூதாதையர்களின் தமிழ் மரபை அங்கீகரிக்கும் விதமாக இவை சேர்க்கப்பட்டுள்ளன. திரு பைடனையும் திருமதி ஹாரிசையும் வரவேற்பதற்கான காணொளியில் ஆயிரக்கணக்கான படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தக் கோலங்களை உருவாக்குவதில் 1,800க்கும் அதிகமானோர் பங்காற்றினர்.

புதிய நிர்வாகம் நல்ல விதமாகத் தொடங்கவேண்டும் என்பதற்கான சின்னங்களாக இவை இருப்பதாக மேரிலாந்தைச் சேர்ந்த சாந்தி சந்திரசேகர் தெரிவித்தார்.