ஈப்போ: ஆடவர் ஒருவரை தஞ்சோங் ரம்புத்தான் பகுதியில் உள்ள ஒரு காட்டில் கொலை செய்ததன் தொடர்பில் இன்று மூன்று நண்பர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவினேஷ் சர்மா, 22, லிங்கேஷ்வரன், 24 மற்றும் சிவராமன், 33 ஆகிய மூவரும் வேலை இல்லாதவர்கள்.
இவர்கள் வெட்டுக்கத்தி ஒன்றைக் கொண்டு சென்று டிசம்பர் 31ஆம் தேதியன்று இரவு 7.40 மணிக்கும் 8.45 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஸ்ரீ மஹா முத்து மாரியம்மன் கோவில் அருகே உள்ள காட்டில் 35 வயது அருண் என்பவரை தாக்கிக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
மேலும் இருவர் இக்குற்றத்தைப் புரிந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்கள் தலைமறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

